திமுக தலைவர் முக ஸ்டாலின் கணக்கு பாடம் சரியாக படிக்க வில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தாக்கியுள்ளார். மதுரை பழங்காநத்தம் பகுதியில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழங்காநத்தம் கிளையின் புதிய கட்டிடம் மற்றும் 19 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகளை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். 

மேலும்,11கோடியே 96 லட்சத்தி 48ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளுடன் கூடிய பத்து வகையான கடன் தொகையை 908 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய கூட்டுறவுத்துறை  அமைச்சர் செல்லூர் ராஜூ கூட்டுறவு வங்கிகளில் கடந்த 9 ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது, 2011 ஆம் ஆண்டு 536 கோடியாக இருந்த நிலையில் தற்போது 1100 கோடி அளவிற்கு வைப்பு தொகை உயர்ந்துள்ளது என்றார்,  தனியார்  வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகள் அனைத்து வகையான நவீன வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். 

நாங்கள் ஆட்சிக்கு வந்தது முதல் கூட்டுறவு துறை லாபத்தில் தான் இயங்கி வருகிறது, என்றார். ஆனால்  நாங்கள் ஒன்றுமே செய்யவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து கூறி வருகிறார், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதால்தான்  மத்திய அரசு விருது வழங்கியது ஆனால் இது எதுவுமே தெரியாமல் பேசி வருகிறார் ஸ்டாலின் , திமுக தலைவர் ஸ்டாலின்  கணக்கு பாடம்  சரியாக படிக்கவில்லை என நினைக்கிறேன் இனியாவது அவர் சரியாக படிக்க வேண்டும், பயிர்க் கடன் வழங்கியதில் தமிழக அரசுதான் சிறப்பாக செயல்பட்டுள்ளது இதனை சவாலாகவே கூறுகிறேன்,என்ற அவர் தமிழகம் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது எனத் தெரிவித்தார்.