மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், டி.டி.வி.தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுவையில் 40 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டமன்றத் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் அமமுகவின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டும், சின்னம் கிடைக்காமல் அவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாமல் உள்ளனர். மேலும், தினகரனால் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள முடியவில்லை.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தினகரன் வழக்கு தொடர்ந்தார்.ன் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால் இன்றே விசாரிக்க வேண்டும் என அமமுக சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போதுடி.டி.வி.தினகரனுக்கு பொதுச்சின்னம் ஒதுக்க முடியாது. பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு மட்டும்தான் பொதுச்சின்னம் தரமுடியும். எனவே குக்கர் சின்னத்தை அமமுகவுக்கு ஒதுக்க முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து முதல் வழக்காக விசாரித்து தீர்ப்பளிக்கப்பட உள்ளது.