தமிழக அமைச்சர்களிலேயே சதாசர்வகாலமும் மிக உச்ச உற்சாகத்தில் துள்ளிக்குதித்து வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரை ஒட்டுமொத்தமாக முடக்கிப்போட்டுள்ளது நேற்று வெளியாகி வைரலாகியுள்ள ஆடியோ ஒன்று. 

அட்மின் மேலெல்லாம் பழியைப்போட்டுவிடமுடியாதபடி, அமைச்சர் ஜெயக்குமார் சொந்தக்குரலில் பேசும் அந்த ஆடியோவில் வழக்கத்துக்கு மாறாக வயதான பெண்ணிடம் பம்முகிறார். பல இடங்களில் பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காமல் தட்டுத்தடுமாறுகிறார். சில இடங்களில் வெறும் காத்துதான் வருது எப்ஃக்ட்.  

பொதுவாக டி.வி.பேட்டிகளில் விறகு பிளப்பதுபோல் எதுகைமோனையோடு, எதிரிகளைப் பந்தாடும் ஜெயக்குமாரின் பேச்சா இது என்று யோசிக்குமளவுக்கு அந்த ஆடியோவில் பம்முகிறார். [ஆடியோவின் முழு பேசுவிபரம் அடுத்த செய்தியில் படிக்கவும்] அமைச்சர் மற்றும் அந்தப்பெண் பேசிய ஆடியோவின் சாராம்சமே ஜெயக்குமாருக்கும் அந்தப்பெண்ணின் மகளுக்கும் இடையே எப்போதோ நடைபெற்ற கசமுசாவில் கரு உருவாகிவிட்டது என அந்தப்பெண்ணே அடிக்கடி கூறுகிறார். 

இந்த ஆடியோ நேற்று வெளியானது முதலே அரசியல் அரங்கில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த விசயத்தை பூடகமாக வைத்துத்தான் சன் நியூஸுக்கு அளித்தபேட்டியில்  தினகரன் அணியின் வெற்றிவேல் ஒரு எம்பிக்கு தம்பி பிறக்கப்போகிறான் என்கிற தகவலைச்சொல்லியிருந்தார். அந்தப்பூனைதான் தற்போது வெளியே வந்திருக்கிறது. 

ஏற்கனவே இருக்கிற பிரச்சினைகளை சமாளிக்கமுடியாமல் திணறிவரும் வேளையில், ஒரு அமைச்சரே இவ்வளவு மலிவான சர்ச்சையில் சிக்கியிருப்பது  முதல்வர் எடப்பாடிக்கு பெரும் தலைவலியாய் மாறியிருக்கிறது.