புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியும். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை விமர்சனம் செய்தும் தனது யூடியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவத்தில் தலைவர்களை விமர்சனம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் முப்படை தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பேர் பிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எச்சரிக்கையும் மீறி பதிவிடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க;- AIADMK: திமுகவில் இணைகிறாரா மாஃபா பாண்டியராஜன்? அவரே வெளியிட்ட முக்கிய தகவல்..!

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் என்பவர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியும். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை விமர்சனம் செய்தும் தனது யூடியூப் சேனல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- Sekar Babu: மனசாட்சி இல்லாதவங்க கூட இப்படி பேசமாட்டாங்க.. அண்ணாமலைக்கு சரியான பதிலடி கொடுத்த சேகர்பாபு.!

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பிபின் ராவத் ராணுவ அதிகாரிகள் உயிரிழந்த சம்பவத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ததாக கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் பாலசுப்பிரமணியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனை கண்டித்து கீரனூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.