முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், டீக்கடையில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் திரவங்கள் கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும். இந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
முஸ்லிம்கள் நடத்தும் டீக்கடைகளில் ஆண்மைக்குறைவு ஏற்படுத்தும் திரவங்கள் கலக்கப்படுவதாக பேசிய கேரளாவின் மூத்த அரசியல்வாதியும், தற்போது பாஜக கூட்டணி கட்சியின் தலைவருமான ஜார்ஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
சர்ச்சை பேச்சு
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் ஜார்ஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், "முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், டீக்கடையில் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும் திரவங்கள் கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும். இந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார்
மேலும், முஸ்லிம்கள் உணவின் மீது எச்சில் துப்பிய பிறகே பரிமாறுகின்றனர். அவர்களின் எச்சிலை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? அவர்கள் துப்புவது ஒரு வாசனை என்று அவர்களின் அறிஞர்கள் கூறுகின்றனர் என அவர் பேசியிருந்தது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக கேரள காவல் துறை தலைவர் அனில் காந்த் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து, ஜார்ஜை கேரள போலீசார் வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது
பின்னர் திருவனந்தபுரம் அழைத்து வந்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தினர். அவர் ஜார்ஜிற்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கினார். இனிமேல் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று ஜார்ஜ் வாக்குறுதி அளித்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த பி.சி.ஜார்ஜ் பல்வேறு கட்சிகளுக்கு தாவினர். கடந்த 2019-ம் ஆண்டில் கேரள ஜனபக்சம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி தற்போது பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகி திடீர் விலகல்.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் டிடிவி.தினகரன்.!
