ஊழல் நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம்.! அம்பலப்படுத்தி திமுகவை லெப்ட் ரைட் வாங்கும் நாராயணன் திருப்பதி..!

தரக்குறைவான கட்டுமானத்திற்கு அந்த நிறுவனமே காரணம் என்று குற்றம் சாட்டியதோடு, இனி எந்த காரணத்தை முன்னிட்டும் பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று தமிழக திமுக அரசு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில்  நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

Contract again with the corrupt company.!Exposing narayanan thirupathy

சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில்  நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- கடந்த 2021ம் ஆண்டு சென்னை புளியந்தோப்பில் கே.பி. பார்க் என்ற இடத்தில் 251 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியதில் ஒரு மூட்டை சிமெண்டுக்கு 15 மூட்டை மணல் என்ற விகிதத்தில் கலந்து மிக பெரும் ஊழலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததோடு,  கையாலேயே வீடுகளை உடைத்துவிடும் அளவிற்கு தரக்குறைவான கட்டுமானத்தை உருவாக்கி, மக்களின் வாழ்வுகளை கேள்விக்குறியாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. 

இதையும் படிங்க;- இந்த ஒரு திட்டத்தில் மட்டும் தினம் ஒரு கோடி ரூபாய் வட்டி.. நாராயணன் திருப்பதி பகீர் தகவல்..!

Contract again with the corrupt company.!Exposing narayanan thirupathy

மேலும் நாமக்கல், திருவள்ளூரில் கட்டிய அரசு மருத்துவமனைகள் தரமில்லாமல் கட்டப்பட்டதாக சொல்லப்படுவதோடு, விழுப்புரம், தளவானூரில் கட்டிய தடுப்பணை சில நாட்களிலேயே உடைந்து போனதயோ, அந்த நேரத்தில் இன்றைய அமைச்சர் பொன்முடி அவர்கள் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியதையோ யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. தரக்குறைவான கட்டுமானத்திற்கு அந்த நிறுவனமே காரணம் என்று குற்றம் சாட்டியதோடு, இனி எந்த காரணத்தை முன்னிட்டும் பிஎஸ்டி கட்டுமான நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று தமிழக திமுக அரசு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில்  நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. 

இதையும் படிங்க;-  உதயநிதியின் பொய்யை கேட்கமுடியாமல் திமுக கூட்டத்தில் மின்விசிறி கீழே விழுந்து விட்டது!இறங்கி அடிக்கும் அண்ணாமலை

Contract again with the corrupt company.!Exposing narayanan thirupathy

கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறு என்று திமுக அரசு ஏற்று கொள்கிறதா? நடந்த சம்பவங்களுக்கு பிஎஸ்டி நிறுவனம் பொறுப்பல்ல என்று திமுக அரசு கூறுமேயானால், பின் அதற்கு யார் பொறுப்பு என்று குறிப்பிட வேண்டிய கடமையும் திமுக அரசுக்கு உண்டு என்பதை உணர வேண்டும். எதன் அடிப்படையில் ஊழல் புரிந்த, தரக்குறைவான பணிகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட  நிறுவனத்திற்கு திமுக அரசு ஒப்பந்தத்தை மீண்டும் அளித்தது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios