உதயநிதியின் பொய்யை கேட்கமுடியாமல் திமுக கூட்டத்தில் மின்விசிறி கீழே விழுந்து விட்டது!இறங்கி அடிக்கும் அண்ணாமலை
திமுகவிற்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மு. க முத்து நான் எம்ஜிஆர் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என கேள்வி அண்ணாமலை எழுப்பினார்.
விவசாயிகள் முதுகில் குத்தும் திமுக
1970 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று விவசாயிகள் பலியான நினைவு தினத்தையொட்டி, திருப்பூர் பெருமாநல்லூரில் உயிரிழந்த விவசாயிகளின் நினைவிடத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்திகளிடம் பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சி, எப்போதுமே விவசாயிகளுக்கு எதிராகத்தான் இருந்து வருகிறது என்பதை அன்று முதல் இன்று வரை நிரூபித்து வருகிறது. போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த பிறகு, முதுகில் குத்தும் திமுகவுக்கு, விவசாயிகள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என கூறினார்.
உதயநிதி பொய் பேச்சு
பாஜக சார்பாக ஜூலை 9ஆம் தேதி நடை பயணம் தொடங்க உள்ளதாக தெரிவித்தவர், அன்றைய தினம் வெள்ளை அறிக்கை வெளியிட இருப்பதாக கூறினார். அப்போது கள்ளுக்கடைகளை முழுமையாக பாஜக ஆதரிக்கும். அதற்கானன திட்டம் தொடர்பாகவும், பனை மற்றும் தென்னை மரம் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் எப்படி ஈட்டுவது என்பது தொடர்பாகவும் அந்த அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் என அண்ணாமலை தெரிவித்தார். சிபிஐ,அமலக்கத்துறை ஆகியவற்றை தனது தொண்டர் படையாக பாஜக பயன்படுத்தி வருவதாக உதயநிதி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அண்ணாமலை, இது தொடர்பாக உதயநிதி பேசி கொண்டு இருக்கும் பொழுதே அங்கு இருந்த மின்விசிறியானது கிழே விழுந்தது. இதிலிருந்தே உதயநிதி பேசும் பொய்யை அந்த மின்விசிறிக்கு பிடிக்கவில்லை. ஆண்டவனே சொல்றான் நீங்கள் சொல்லுவது பொய் என்று,
தமிழகம் வரும் மோடி
மேலும் ஜல்லிக்கட்டுக்காக மு க ஸ்டாலின் போராடியதாக உதயநிதி கூறினார். இது எப்படி உள்ளது என்றால் மு.க முத்து மேக்கப் போட்டு எம்ஜிஆர் என்று கூறியது போல் இருப்பதாக விமர்சித்தார். எனவே திமுகவிற்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மு. க முத்து நான் எம்ஜிஆர் என்று சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என கேள்வி எழுப்பினார். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதற்கு ஒரு மனிதர் மட்டுமே காரணம் அது மோடி தான் என குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரதமரை சிறப்பு விருந்தாளியாக அழைப்போம். தமிழக மக்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றால் அது பிரதமர் மோடிக்கு மட்டும்தான் நன்றி சொல்ல வேண்டும் அவர்தான் தமிழக பாரம்பரியத்தை மீட்டெடுத்துள்ளார்.
நித்திஸ்குமாரை தமிழகம் அழைத்து வந்தது ஏன்.?
எங்களுக்கும் சீமானுக்கும் கொள்கை அடிப்படையில் பல இடங்களில் வேறுபாடு உள்ளது.ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் ஒத்துப்போகிறது. இருவரும் ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம் என்பதில் ஒன்றாக இணைவதாக அண்ணாமலை தெரிவித்தார். பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகள் இருந்துள்ளனர். எம்எல்ஏவாக அமைச்சராக ஒருவர் மீது கூட குற்றச்சாட்டு கூற முடியாது. தமிழகத்திலிருந்து வேலை தேடி பீகாருக்கு செல்லவில்லை பீகாரில் இருந்துதான் வேலை தேடி தமிழகத்திற்கு வந்திருப்பதாக ஏவ வேலு கூறியுள்ளார். அதேபோலத்தான் பிகாரிலிருந்து தமிழகத்திற்கு வேலை பார்ப்பதற்காக ஆளு ரவி வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஊழலும் திமுக அமைச்சர்களும்
இது கடுமையான விமர்சனம். ஆனால் திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை தெரிந்து வைப்பவர் பீகார்முதலமைச்சர் நிதிஷ்குமார் அவரைத்தான் திமுக அழைத்து வந்துள்ளது. இதுதான் திராவிட மாடல், திமுகவின் இரட்டை நிலைப்பாடு என தெரிவித்தார். அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி கைது செய்துள்ளது. பொன்முடி மீது நீதிமன்றத்தில் வழக்குவந்துள்ளது. இதே நிலை நீடித்தால் ஸ்டாலின் மட்டும்தான் அமைச்சரவையில் இருப்பார். ஊழல் இல்லாத ஒருவர் கூட தமிழக அமைச்சரவையில் இல்லையென அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்