சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று நடிகர் ரஜினி வெளிப்படையாக அறிவித்து இருப்பதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார் திரைப்படத்தின் சூட்டிங்கிற்கு புறப்படுவதற்கு முன்னர் நடிகர் ரஜினி தனது வீட்டின் முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் சட்ட மன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அசால்டாக கூறிவிட்டு விமானத்தில் ஏறி விட்டார் ரஜினி. ஆனால் அந்தப் பேட்டி தான் தமிழக அரசியலில் தற்போது விறுவிறுப்பையும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

இதுநாள் வரை எப்போது கட்சி துவங்குவீர்கள் என்கிற கேள்விக்கு வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது துவங்கும் போது தானே கூறுவேன் என்று மட்டுமே ரஜினி கூறி வந்தார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்று ரஜினி கூறியிருப்பதன் பின்னணியில் மிகப்பெரிய திட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. தர்பார் படப்பிடிப்பில் ரஜினி பிஸியாக இருந்தாலும் கடந்த ஒரு மாத காலமாகவே தமிழக அரசியல் நிலவரத்தை அவர் தீவிரமாக கவனித்து வந்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என அனைத்துக் கட்சித் தலைவர்களின் பிரச்சாரத்தையும் ரஜினி உன்னிப்பாக கவனித்து தாகவும் அவர்கள் யாருக்கும் பொதுமக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்பதை ரஜினி கண்டு கொண்டதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான தேர்தல் போல் இல்லாமல் ஒவ்வொரு தொகுதியிலும் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிடையிலான தேர்தல் போல் அமைந்து விட்டது என்று ரஜினி கருதுவதாகவும் கூறுகிறார்கள். இப்படி ஒரு சூழலில் தனது அரசியல் பிரவேசம் இருந்தால் மக்களிடம் எளிதாக சென்று சேர்ந்துவிட முடியும் என்ற ரஜினி நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயார் என்று ரஜினி தடாலடியாக அறிவித்து விட்டு சென்றதாகவும் பேசிக் கொள்கிறார்கள்.