நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங், விசிக, கம்யூனிஸ்ட் களம் இறங்கவுள்ள தொகுதிகள் எது.? வெளியான இறுதி பட்டியல்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், திமுக போட்டியிடவுள்ள 21 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Constituencies have been allotted to the parties that will contest in the DMK alliance for the parliamentary elections KAK

திமுக போட்டியிடவுள்ள தொகுதிகள்

வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்,வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, தஞ்சாவூ,ர் தூத்துக்குடி, தென்காசி, பெரம்பலூர், தேனி ஆகிய தொகுதிகளில் திமுக களம் இறங்கவுள்ளது. 

காங்கிரஸ் போட்டியிடவுள்ள இடங்கள்

இதே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் (தனி) கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,

கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது

விசிக மதிமுக மற்றும் முஸ்லிம் லீக் தொகுதிகள்

விடுதலை சிறுத்தை கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதிமுகவிற்கு திருச்சி தொகுதியும், முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேகவிற்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு- தமிழகத்தில் காங். போட்டியிடவுள்ள 9 தொகுதிகள் எது தெரியுமா.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios