Asianet News TamilAsianet News Tamil

திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு- தமிழகத்தில் காங். போட்டியிடவுள்ள 9 தொகுதிகள் எது தெரியுமா.?

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்த எந்த தொகுதி என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The list of 9 constituencies for which Congress will contest in Tamil Nadu has been published KAK
Author
First Published Mar 18, 2024, 1:00 PM IST

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளது.அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதியும், புதுவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டது மேலும் மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 21 தொகுதியில் திமுக போட்டியிடவுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு எந்த இடங்கள் தெரியுமா.?

ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக் கட்சிக்கும், நாமக்கல் தொகுதி கொமதேகவிற்கும் ஒதுக்கப்பட்டது. இதே போல இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் போட்டியிடவுள்ள தொகுதிகள் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது. இதன் காரணமாக மதிமுகவிற்கும் எந்த தொகுதி என அறிவிக்காமல் இருந்தது. இந்தநிலையில்  இன்று திமுக- காங்கிரஸ் கட்சி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,  காங்கிரஸ் கட்சிக்கு திருவள்ளூர் (தனி )கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ஏற்பட்டது. 

இதையும் படியுங்கள்

அதிமுக - தேமுதிக கூட்டணி உறுதியானது: தேமுதிகவுக்கு 4 தொகுதிகள்?

Follow Us:
Download App:
  • android
  • ios