புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தொகுதி வாக்குகள் எண்ணும் பணி இன்று  காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே  காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை வகித்தார். 


கிட்டத்தட்ட 1 மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் 14782 வாக்குகள் பெற்றார். என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவேனேஷ்வர் 7411  வாக்குகள் பெற்றார். இதில்  7171 வாக்குகள் வித்தியாசத்தில் ஜான்குமார் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.