congress vice president ragul gandhi speech in dmk chief karunanidhi birthday function

எதிர்கட்சிகளை ஒடுக்கும் மத்திய அரசின் போக்கை அனைவரும் ஒன்றினைந்து எதிர்க்க வேண்டும்… ராகுல் காந்தி அதிரடி…

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் மற்றும் சட்டசபையில் அடியெடுத்து வைத்ததன் வைரவிழா இன்று மாலை சென்னை ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.

இதில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கருணாநிதியின் வைர விழாவில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன் என்று தெரிவித்தார்.. மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் தலைவராக கருணாநிதி விளங்குகிறார். அவரின் பேச்சு தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது என்று தெரிவித்தார்.

கருணாநிதியின் மதசார்பற்ற கொள்கை தற்போது நாட்டிற்கு தேவை. தமிழின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து எழுதிகொண்டிருப்பவர் என்று பாராட்டுத் தெரிவித்தார்.

ஒரே இரவில் இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் பாக்கெட் டில் உள்ள பணத்தை செல்லாததாக்கினார் மோடி. இதற்காக அவர் யாரையும் , எந்த மாநில முதல்வர்களையும் கலந்து ஆலோசிக்கவில்லை. நிதியமைச்சருக்கே சொல்லாமல் பணமதிப்பிழப்பை கொண்டு வந்தார்

ஆனால் இந்த நடவடிக்கையால் என்ன பயன் ஏற்பட்டது என்றால் அது ஒன்றுமில்லை என தெரிவித்தார்.

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை என்று அருண்ஜேட்லி சொல்கிறார் , ஆனால் உலகம் முழுதும் சொல்கிறார்கள் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது என்று. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துக் செல்வதாக கூறிய மோடி தற்போது இந்தியாவை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுள்ளார் என தெரிவிததார்.

இந்தியாவை ஒரே கலாச்சாரத்தின் கீழ் ஒரே மதத்தின் கீழ் கொண்டுவர மோடி நினைக்கிறார் . ஆனால் ஒருபோதும் அதை அனுமதிக்கமாட்டோம் என்று ராகுல்காந்தி தெரிவித்தார்.

நாட்டில் உள்ள எல்லோரையும் இங்கு ஒருங்கிணைத்ததற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட ராகுல் காந்தி,

அவர் மாபெரும் இடத்தை அடைவார் என்றும். அவர் சரியான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார்.

இன்று கலைஞரை பெருமையாக சொல்வதை போல் ஒரு காலத்தில் ஸ்டாலினையும் நாம் அனைவரும் போற்றி பேசுவோம் என ராகுல் காந்தி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்..