நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் பல திட்டங்களை செயல்படுத்திஉள்ளது. ஆனால், திடீரென ஆட்சிக்கு வந்த நீங்கள்,   ‘காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்கிறீர்கள். நீங்கள்தான் இந்த நாட்டை முன்னேற்றியதாகக் கூறுகிறீர்கள். இது, பச்சை பொய் அல்லவா? 

நம் பிரதமர் மிகச் சிறந்த வியாபாரி. அவரிடம் உள்ள பொருளை தந்திரமாக விற்கும் திறமை படைத்தவர். அந்தத் திறமை, காங்கிரசிடம் இல்லை என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். 
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி மோடி அரசை கடுமையாகத் தாக்கி பேசினார். பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவையில் இருந்தபோதே ஆதிர்ரஞ்சன் பாஜகவையும் மோடி அரசையும் தாக்கி பேசினார்.


“உண்மைகளை மறைத்து காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை நகல் எடுத்தும் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த 23 திட்டங்களில்19 திட்டங்களுக்கு பெயரை மாற்றி தாங்கள் கொண்டுவந்த திட்டமாகப் பெருமை பேசுகிறது மத்திய அரசு. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் பல திட்டங்களை செயல்படுத்திஉள்ளது. ஆனால், திடீரென ஆட்சிக்கு வந்த நீங்கள், ‘காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்கிறீர்கள். நீங்கள்தான் இந்த நாட்டை முன்னேற்றியதாகக் கூறுகிறீர்கள். இது, பச்சை பொய் அல்லவா?