ராகுல்காந்தி சென்னை  வருகை தர உள்ள நிலையில்  காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் 7 ஆம் தேதி நடைபெறும்  என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .  அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது .  தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட  தலைவர்கள் கூட்டம் 7ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ளது .  கே.எஸ் அழகிரி தலைமையில் நடக்கும் அப்பொதுக் கூட்டத்தின் முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.  சமீபத்தில் டெல்லி சென்ற தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம், சென்னை வருவதாக   ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார் . 

எனவே ராகுல் காந்தி கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஒன்றை சென்னையில் நடத்த காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர்.  இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர் ,  ராகுல் காந்தி கலந்து கொள்ளும் வகையில் பிரமாண்ட  பொதுக் கூட்டத்தை சென்னையில் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது  அதேபோல் இந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்ய தனக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டி காங்கிரஸ் தேசிய அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபாலும் கோரியுள்ளார்.

 

இந்நிலையில் ராகுல்காந்தி இம்மாத இறுதி சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது , ஆனால் அதற்கான தேதி   மட்டும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை . காங்கிரஸ் மேலிடத்திலிருந்தும்  ராகுல் வருகை தொடர்பாக எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அதனால் அவரது வருகை  இம்மாத இறுதியில் இருக்க வாய்ப்பில்லை என்றும் காங்கிரசார் மத்தியிலும் பேச்சு அடிபடுகிறது . ஆனாலும் ராகுல் காந்தி வருகை பற்றியும் மாவட்ட  தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார் .  மேலும் கட்சியின் உள்கட்சி விவகாரம் குறித்தும் மாவட்டதலைவர்கள்   கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது ,  அதில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என