Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுக்க போகும் அழகிரி? மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் திட்டமா?

கெளரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால் மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுகவுடன் கூட்டணியுடன் வைக்கலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Congress plans to form an alliance with the makkal needhi maiam
Author
Chennai, First Published Mar 4, 2021, 1:16 PM IST

கெளரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால் மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுகவுடன் கூட்டணியுடன் வைக்கலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. இதனால், அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுகவுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடா்பாக 2 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்பட முடியாமல் இழுபறி நீடித்து வருகிறது. 30 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்து வருகிறது. ஆனால், திமுக தரப்பில் 20 முதல் 24 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்படும் என திமுக திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால், காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. 

Congress plans to form an alliance with the makkal needhi maiam

தொகுதி பங்கீடு தொடர்பாக டெல்லியில் ராகுல்காந்தியை தினேஷ் குண்டுராவ் சந்தித்து விளக்கமளித்துள்ளார். அப்போது, ராகுல்காந்தி 30 தொகுதிகளுக்குக் குறையாமல் திமுக கூட்டணியில் கேட்டு பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக சத்தியமூா்த்தி பவனில் காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நிர்வாகிகளிடம்  தினேஷ் குண்டுராவ் மற்றும் கே.எஸ்.அழகிரி தனித் தனியாக கருத்து கேட்டு வருகின்றனர்.

Congress plans to form an alliance with the makkal needhi maiam

அதில், கெளரவமான எண்ணிக்கையில் தொகுதி கிடைக்காவிட்டால் மக்கள் நீதி மய்யம் அல்லது அமமுகவுடன் கூட்டணியுடன் வைக்கலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறைந்த தொகுதிகளை தந்தால் திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios