Asianet News TamilAsianet News Tamil

இழுபறியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி... 31 சீட்டுக்காக கதர்சட்டைகள் மல்லுக்கட்டு..!

திமுக கூட்டணியிலேயே தொடர விரும்பும் காங்கிரஸ் கட்சி, 31  தொகுதிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
 

Congress packs to go to third team ... Expect 31 seats from DMK alliance..!
Author
Chennai, First Published Mar 5, 2021, 8:44 AM IST

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் உள்ளது. திமுக  தரப்பில் 22 முதல் 25 தொகுதிகள் வரை வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதால், அக்கட்சித் தொண்டர்கள், குறைந்த எண்ணிக்கையை ஏற்கக்கூடாது என்று விமர்சித்து வருகிறார்கள். குறைந்தபட்சம் 31 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது அணிக்கு செல்லும் என்றும் தகவல்கள் வெளியாயின.

Congress packs to go to third team ... Expect 31 seats from DMK alliance..!
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் மக்கள் நீதி மய்யத்துடன் எந்தப் பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. மூன்றாவது அணி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் விதிமுறையை மீறியதாக ராகுல் காந்தி மீது பாஜக கூறியிருப்பதில் எந்த நியாயமும் இல்லை. பாஜகவிடம் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். நாங்கள் எந்தத் தேர்தல் விதிமுறையும் மீறவில்லை” என்று தெரிவித்தார்.Congress packs to go to third team ... Expect 31 seats from DMK alliance..!
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்துள்ளது. எனவே, இன்று மாலை இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துப் போட்டியிடுவதாலோ அல்லது வேறு கூட்டணிக்கு செல்வதாலோ எந்தப் பிரயோஜனமும் இல்லை என்பதை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. எனவே, திமுக கூட்டணியைத் தொடரவே காங்கிரஸும் விரும்புகிறது. எனவே, திமுகவுடனான  பேச்சுவார்த்தையில் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு ஏற்படும் வாய்ப்புள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios