'போதி தர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் ஸ்டாலின்’ என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை புகழ்ந்து இருக்கிறார் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை.

தமிழக சட்டசபையில் விதி எண் 110 என் கீழ் முதல்வர் ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டதற்கு நன்றி தெரிவித்து பேசிய சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'போதிதர்மரின் மரபணுவில் வந்தவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

முதல்வர் ஸ்டாலின் மாதத்தில் 2 அல்லது 3 முறை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்வார். அப்போது அங்கிருக்கும் கடைகளில் டீ குடித்தபடியே பொதுமக்களின் குறைகளை கேட்டறிவார். அது போல் தினந்தோறும் உடற்பயிற்சிகளை அவர் செய்ய தவறுவதே இல்லை. முதலமைச்சரின் ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவிற்கு ராகுல் காந்தி வந்தார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வயது குறித்து பேசும்போது,இத்தனை வயதிலும் முதல்வர் ஸ்டாலின் இளமையாக இருக்க என்ன காரணம் என்பது குறித்த புத்தகத்தை எழுதுமாறு கடந்த முறை உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவின் போது ராகுல் தெரிவித்திருந்தார். அடுத்த முறை தமிழகம் வந்தால் முதல்வருடன் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் தற்போது தெரிவித்துள்ளார்' என்று கூறினார்.

இதையும் படிங்க : ”இந்திய அரசின் ட்ரோன்களை தயாரிக்க தேர்வானது நடிகர் அஜித்குமாரின் தக்‌ஷா குழு.." AK ரசிகர்கள் கொண்டாட்டம் !