congress leading in prime minister modi own constituency

குஜராத்திலும் இமாச்சலிலும் ஆட்சி அமைக்கப்போகும் பாஜக, பிரதமர் மோடியின் சொந்த தொகுதியில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. 

குஜராத்திலும் இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. குஜராத்தில் உள்ள மொத்தம் 182 தொகுதிகளில், பாஜக 44 தொகுதிகளிலும் காங்கிரஸ் 36 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 54 தொகுதிகளில் பாஜகவும் 42 தொகுதிகளில் காங்கிரஸும் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. 

ஆனால், பாஜக மீது மக்களிடையே அதிருப்தி நிலவுவதும் இந்த தேர்தல்களின் மூலம் தெரியவந்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த ஊரான வட்நகர் சார்ந்துள்ள மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் 5ல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 

அதேபோல, பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான உஞ்சாவில் பாஜக எம்.எல்.ஏ நாராயன் படேல், காங்கிரஸ் வேட்பாளர் ஆஷா படேலைவிட 20000 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

கடந்த 2012ம் ஆண்டு தேர்தலிலும் இதே இரண்டு வேட்பாளர்களும்தான் நேருக்கு நேர் மோதினர். அப்போது காங்கிரஸின் ஆஷா படேலை 25000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெற்ற நாராயண் படேல், இந்த முறை அவரை விட 20000 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.

பிரதமர் மோடியின் சொந்த மாவட்டத்திலும் சொந்த தொகுதியிலும் பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்திருப்பது, பாஜக மீதான மக்களின் அதிருப்தியை காட்டும் விதமாக அமைந்துள்ளது.