திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்த என்னுடைய அறிக்கைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சித் தேர்தல் தொடர்பானது மட்டுமே. திமுகவுடனான கூட்டணி என்பது கொள்கை ரீதியிலான கூட்டணி; மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடிய கூட்டணி ஆகும். அந்த அறிக்கையில் யாருக்கு எதிராகவும் எதுவும் சொல்லவில்லை.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்ல உறவுவும் நல்ல புரிதல் உண்டு. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று முதல்வராக வரவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று கருத்து கிடையாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 
டெல்லியில் இரு தினங்களாக முகாமிட்டிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். “தமிழகத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம், தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து என்னுடைய கருத்துகளை அகில இந்திய தலைமையிடம் தெரிவித்தேன். கூட்டணி தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் என்ன பேசினார் என்று எனக்கு முழுமையாகத் தெரியாது. அதை முழுமையாகத் தெரிந்துகொண்டபிறகு என்னுடைய கருத்துகளை தெரிவிக்கிறேன்.

திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்த என்னுடைய அறிக்கைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சித் தேர்தல் தொடர்பானது மட்டுமே. திமுகவுடனான கூட்டணி என்பது கொள்கை ரீதியிலான கூட்டணி; மதசார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கக்கூடிய கூட்டணி ஆகும். அந்த அறிக்கையில் யாருக்கு எதிராகவும் எதுவும் சொல்லவில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் நல்ல உறவுவும் நல்ல புரிதல் உண்டு. 

திமுக தலைவர்கள் மரியாதைக்குரியவர்கள். காங்கிரஸ் தலைவர்களை திமுகவினர் மதிக்ககூடியவர்கள். அதில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை. திமுக-காங்கிரஸ் இடையே எந்த விஷயத்திலும் கருத்து வேறுபாடே இல்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று முதல்வராக வரவேண்டும் என்பதிலும் மாற்று கருத்து எங்களுக்குக் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட சங்கடத்தைச் சொல்கிறோம். இதில் தவறு எதுவும் இல்லை. திமுகவுக்கும் சில சங்கடங்கள் இருக்கலாம். இதையெல்லாம் திமுக- காங்கிரஸ் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை’ என்று தெரிவித்தார்.