Asianet News TamilAsianet News Tamil

20 லட்சம் கோடியில் கூலித்தொழிலாளிக்கு வெறும் 10 கிலோ அரிசி.. அறிவார்ந்த திட்டமிடல் என கே.எஸ். அழகிரி அட்டாக்!

 கடந்த 5 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 20 லட்சம் கோடி தொகுப்பிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது. இந்நிலையில் 20 லட்சம் கோடியில் கூலித் தொழிலாளிக்கு 10 கிலோ அரிசி மட்டுமே கிடைத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி காட்டமாக விமர்சித்துள்ளார்.
 

Congress leader K.S.Alagiri attacked Bjp government
Author
Chennai, First Published May 17, 2020, 9:32 PM IST

50 நாட்களாக வேலையின்றி நடைபிணமாக காட்சி அளிக்கும் கூலி தொழிலாளிக்கு 10 கிலோ அரிசிதான் கிடைக்குமாம். என்ன அறிவார்ந்த திட்டமிடல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.Congress leader K.S.Alagiri attacked Bjp government
கொரோனா ஊரடங்கு அமலானது முதலே ஏழை, எளிய மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. ஏழை, எளிய மக்கள் கஷ்டத்திலிருந்து மீள அவர்களுடைய கையில் பணம் வழங்க வேண்டும் என்றும் அக்கட்சி யோசனை கூறியது. கொரோனா பாதிப்பிலிருந்து மீளும் வகையில் மீட்புத்திட்டமாக 20 லட்சம் கோடிக்கு திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். Congress leader K.S.Alagiri attacked Bjp government
இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 20 லட்சம் கோடி தொகுப்பிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டிவருகிறது. இந்நிலையில் 20 லட்சம் கோடியில் கூலித் தொழிலாளிக்கு 10 கிலோ அரிசி மட்டுமே கிடைத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி காட்டமாக விமர்சித்துள்ளார்.Congress leader K.S.Alagiri attacked Bjp government
இதுதொடர்பாக கே.எஸ். அழகிரி இன்று தன்னுடைய ட்விட்டர் பதிவில், “கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரி செய்ய மோடி அரசு 20 லட்சம் கோடியை ஒதுக்கி உள்ளார்கள். ஆனால் 50 நாட்களாக வேலையின்றி நடைபிணமாக காட்சி அளிக்கும் கூலி தொழிலாளிக்கு 10 கிலோ அரிசிதான் கிடைக்குமாம். என்ன அறிவார்ந்த திட்டமிடல்” என்று கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios