காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் ப.சிதம்பரத்தின் கைதை அக்கட்சியின் தொண்டர்களே பெரிய அளவில் கண்டிக்காமல் இருக்கும் அதேசமயம், கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதற்கு, அந்த மாநிலத்தில் போராட்டங்கள் நடந்தன. 


தீ பந்தத்துடன் காங்கிரஸ் தொண்டர்கள் செய்த மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தியதை  ஊடகங்கள் அனைத்துமே செய்தியாக்கின.  இருவருமே காங்கிரஸின் முகங்கள் தான். நீண்ட பாரம்பரியம் உடைய தலைவர்கள் தான். 

ஆனால் டி.கே.சிவகுமாரை விட சிதம்பரத்தால் காங்கிரஸும், காங்கிரசால் சிதம்பரமும் அடைந்த பலன்கள் ஏராளம். ஆனால், யாருக்கு மக்கள் பலம் இருக்கிறது என்பதை இந்த கைது நடவடிக்கைகள்  மூலம் மக்களுக்கு தெரியவந்துள்ளது..

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அடிக்கடி ஆட்சிக்கு வருகிறது. தமிழ்நாட்டில் 50 வருடங்கள் ஆயிற்று. 

ஆகையால், அங்கே இருக்கின்ற பலம் இங்கே இல்லை. அதற்காக இங்கே ஆதரவு இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், மறியலில் ஈடுபடுகிற அளவுக்கு கர்நாடகாவில் காங்கிரஸுக்கு இருக்கும் பலம் தமிழ்நாட்டில் இல்லை என செம காண்டாக தெரிவித்தார்.