Asianet News TamilAsianet News Tamil

நாங்களும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துனம்ல ! மோடியை கிழித்து தொங்கவிட்ட மன்மோகன் சிங் !!

காங்கிரஸ்  கட்சி ஆட்சி செய்தபோதும் பல முறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் ஆனால் அதை பாஜகவைப் போல் நாங்கள் ஓட்டுக்காக பயன்படுத்தியதில்லை என்று முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

congress also did surgical strike
Author
Delhi, First Published May 3, 2019, 8:29 AM IST

டெல்லியில்  ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பேட்டி அளித்தார். அதில் கடந்த, 2016ல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், சமீபத்தில், பாகிஸ்தானின் பாலகோட்டிலும், உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது, நம் விமானப் படையினர் நிகழ்த்திய துல்லியத் தாக்குதல்களை, பிரதமர் மோடி, ஓட்டுக்காக பயன்படுத்துவது வெட்கக்கேடானது என குறிப்பிட்டார்.

congress also did surgical strike

இது போல, எத்தனையோ துல்லியத் தாக்குதல்களை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிகழ்த்தியுள்ளது. ஆனால், அதுகுறித்து, ஒருபோதும் விளம்பரப்படுத்தியதில்லை என்றும் ஓட்டுக்காக அதைப் பயன்படுத்தியதும் இல்லை என மன்மோகன் சிங் தெரிவித்தார்.

congress also did surgical strike
ராணுவ நடவடிக்கையை, ஓட்டு வங்கிக்காக பயன்படுத்துவதை விட, இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு, தகுந்த பதிலடி கொடுப்பது முக்கியம் என்பது தான், எங்கள் நிலைப்பாடு. 

ஆனால், மோடி, ராணுவத்தினரின் வீரத்தை, தங்கள் கட்சிக்கு கிடைக்கும் ஓட்டுக்காக பயன்படுத்துகிறார். கடந்த, 70 ஆண்டுகளில், எந்த அரசும், நம் ராணுவத்தினரின் வீரத்தில் ஒளிந்து கொண்டு ஓட்டு கேட்கவில்லை.

congress also did surgical strike

 ராணுவத்தை அரசியலுக்கு இழுப்பது வெட்கக்கேடு; ஏற்க முடியாதது. இது, நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வறுமை ஆகியவற்றில் இந்த அரசு சந்தித்த, மன்னிக்க முடியாத தோல்விகளை திசை திருப்பும் நடவடிக்கை.மோடி அரசு, தேசப் பாதுகாப்பு என்ற ஒரேஅம்சத்தை கையிலெடுத்து, வெற்றுக் கூச்சல் போடுகிறது என வெளுத்து வாங்கினார்.

congress also did surgical strike

புவிசார் அரசியலில், அந்தந்த சூழலுக்கு ஏற்பவே, நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். வரலாற்றை திரும்பிப் பார்த்தால், இது புரியும். பாகிஸ்தானை ஒரு பயங்கரவாத மையமாக தனிமைப்படுத்தி, பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு, சர்வதேச சமூகத்தை அணி திரட்டுவது தான், எங்கள் நோக்கம். அதில் நாங்கள் வெற்றியும் பெற்றோம். என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios