பிரின்ஸ்பால் ரூமில் ரத்த கரையுடன் காண்டம்.. தாளாளர் மகன்கள் எங்கே? பகீர் கிளப்பும் வி.சி.க. மாவட்ட செயலாளர்
தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கௌதம சன்னா பிரபல ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கௌதம சன்னா பிரபல ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 13ம் தேதி ஸ்ரீமதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக நீதி கேட்டு தொடர் போராட்டம் நடைபெற்றது. 4 நாட்கள் அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் 5வது நாளான கடந்த 17-ம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில், பள்ளி வாகனங்கள், நாற்காலி, மேஜை, பெஞ்சுகள் முற்றிலுமாக தீக்கறையாயின.
இதனையடுத்து, தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததையடுத்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதில், 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாணவியின் மரணம் மர்மமாக இருந்து வரும் நிலையில் அவ்வப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கௌதம சன்னா பிரபல ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், மாணவி மரணம் குறித்து அவர்கள் கூறுகின்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேட்டி பின்வருமாறு;- பள்ளி தாளாளர் ரவிசந்திரனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சக்தி பள்ளி உரிமையாளரின் மகன்கள் மீது ஆரம்ப முதலே சந்தேகம் இருந்து வருகிறது. ஆனால், அவர்கள் இதுவரை விசாரணை வளையத்திற்கு கொண்டு வரவில்லை.
இருவருமே தற்போது ஊரில் இல்லை. வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. ரவிசந்திரன் மகன் சக்திக்கு பள்ளி பிரின்ஸ்பல் ரூமில் இரவில் தங்கும் பழக்கம் இருந்து வந்துள்ளதாக நேரில் பார்த்த அப்பகுதி மக்களே கூறுகின்றனர்.
ஸ்ரீமதி தற்கொலை செய்யும் அன்றைய இரவு அந்தப் பள்ளியின் பிரின்சிபாலுக்கு பர்த்டே பார்ட்டி உள்ளே நடந்துள்ளது. அதேபோல் பிரின்ஸ்பால் ரூமில் காண்டம் கிடைத்துள்ளது. குப்பை தொட்டியில் கிடைத்த காண்டம் யாராவது போட்டு இருக்கலாம். ஆனால், குறிப்பாக பிரின்ஸ்பால் ரூமில் ரத்த கரையுடன் காண்டம் இருந்துள்ளது. இது போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த காண்டத்தில் இருக்கும் ரத்தத்தை பரிசோதனை செய்தால் அது யாருடைய டிஎன்ஏ என்று தெரிந்துவிடும். ஸ்ரீமதி இறந்த 2 நாட்களுக்கு பிறகு தாளாளர் மகன்கள் இருவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை.
ஸ்ரீமதி மாணவிக்கும் அந்தக் கல்லூரியின் தாளாளரின் மகனுக்கும் நட்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகையால் இருவருடைய நட்புக்கும் இந்த பெண்ணின் மரணத்திற்கும் சம்பந்தம் இருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு தகவலை கௌதம சன்னா பகிர்ந்துள்ளார்.