Asianet News TamilAsianet News Tamil

ஏழை விவசாயிகளை ஸ்டாலின் செருப்புடன் ஒப்பிடுவதா - 2ஜி ஊழல் ராசாவுக்கு எழும் கண்டனங்கள்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டு பேசிய தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலை அப்படித்தான் நானும் அப்படியே இருந்துவிட்டு போகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார். 

 

condemnation strengthening against dmk a raja who insults farmers
Author
Chennai, First Published Mar 25, 2021, 5:44 PM IST

தலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டு பேசிய தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலை அப்படித்தான் நானும் அப்படியே இருந்துவிட்டு போகிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார். 

condemnation strengthening against dmk a raja who insults farmers

1, 76, 000 கோடி ரூபாய் 2ஜி ஊழல் வழக்கு மூலம் உலக பெயர் பெற்ற தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கூட்டம் ஒன்றில் பேசும்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தரம் தாழ்ந்த வகையில் ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டு பேசினார். வெல்ல மண்டியில் வேலை பார்த்த எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் அணிந்துள்ள செருப்பின் விலையை விட மதிப்பு குறைவானவர் என்றும் அவர் ஸ்டாலினுக்கு போட்டியா என்றும் பேசினார். முதலமைச்சர் என்றும் பார்க்காமல், ஸ்டாலினின் செருப்புடன் ஒப்பிட்டு ராசா பேசியதற்கு அனைத்து தரப்பு மக்களும் கண்டனங்கள் தெரிவித்தனர். சமூக நீதியின் பாதுகாவலன் என்று கூறிக் கொள்ளும் தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா சமூக நீதியை காற்றில் பறக்கவிடும் வகையில் பேசியது அனைத்து தரப்பு மக்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 

condemnation strengthening against dmk a raja who insults farmers

2ஜி ஊழல் தொடர்பான வழக்கில் ராசா கைது செய்யப்பட்டபோது, தனது சமூக படிநிலை காரணமாக பழிவாங்கப்பட்டேன் என்று கூறி ஊழலுக்கு வக்காலத்து வாங்க ஜாதிய சங்கங்களை துணைக்கு அழைத்த ராசா ,முதலமைச்சரை தரம் தாழ்ந்த வகையில் பேசுவது தி.மு.க கொடுத்த பதவி தான் காரணம் என்று பொது வெளியில் விமர்சனங்கள் எழுப்படுகிறது. 

இதற்கிடையே, மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராசாவின் பேச்சை குறிப்பிட்டு, ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலை அப்படித்தான், நானும் அப்படியே இருந்துவிட்டு போகிறேன் என்று கூறினார். ஒரு லட்சத்து எழபத்து ஆறாயிரம் கோடி கொள்ளையடித்தவர்கள் அப்படித்தான் பேசுவார்கள் என்றும் கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் தி.மு.கவினர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

condemnation strengthening against dmk a raja who insults farmers

ராசாவின் பேச்சு அரசியல் தரம் தாழ்ந்த பேச்சு என்றும்,முதல்வர் எடப்பாடி மீது உள்ள வைத்தெரிச்சலிலும், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற விரக்த்தியில் தி.மு.கவினர் இது போன்ற பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். ராசா தரக்குறைவக பேசியது குறித்து, முதலமைச்சருக்கே இந்த நிலமை என்றால் ஆட்சிக்கு வந்தால்  ஏழை எளிய மக்களின் நிலை என்னவாகும் என்று பொதுமக்கள் அச்சம் கொள்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios