நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் புஷ்டியாக இருக்கலாம். ஆகையால் நம்மை கெரோனா அண்டாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- கொரனோ தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. ராயபுரம் மண்டலத்தை பொறுத்தவரை தொற்றின் தாக்கம் குறைந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. எப்போது முழுமையாக குறையும் என்பது உலக சுகாதார மையத்திற்கு தான் தெரியும்.

கொரோனா பாதிப்பு முழுமையாக குறையும் வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முடியாது. கொரோனா பாதிப்பு குறைய 6 மாதம் ஆகலாம். ஒரு வருடமும் ஆகலாம். தொற்றின் தாக்கம் குறைவதற்கு நீண்ட காலம் என்பதால் அதுவரை மக்களை நாம் கட்டி போடமுடியாது. அதே நேரத்தில் அவர்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கை தளர்த்தினோம். சென்னையை பொருத்தவரை அதிகளவு காய்ச்சல் முகாம் அமைக்கபட்டு 8 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முககவசம், தனிமனித இடைவெளி, கை கழுவுவதை பின்பற்றுவதன் மூலம் கொரனோ பாதிப்பை குறைக்க முடியும். 

மேலும், பேசிய அமைச்சர் தற்போது தொற்று எண்ணிக்கை குறைவாக கணக்குக் காட்டுவதாக கூறுவது தவறானது பொய்க்கணக்கு சொல்ல வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை.முதலமைச்சர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்.