நடிகை கஸ்தூரி, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் டுவிட்டரில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை கஸ்தூரி, அண்மை காலமாக டுவிட்டரில் அனைத்து விஷயங்கள் குறித்து பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சினிமா, அரசியல், சமூக சார்ந்த விஷயங்கள் குறித்து நடிகை கஸ்தூரி, தனது கருத்தை பதிவிட்டு வருகிறார்.

அவரின் டுவிட்டர் பதிவுக்கு ஆதரவும் எதிர்ப்பு எழுந்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் சிலருடன் நடிகை கஸ்தூரி வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் உண்டு. சிலர் அவருக்கு போன் செய்து மிரட்டுவதாகவும் கஸ்தூரி புகார் கூறியும் இருந்தார்.

நடிகை ஸ்ரீதேவி மறைவின்போது, தொலைக்காட்சிகளில் ஸ்ரீதேவி நடித்த பாடல் காட்சிகள், திரைப்படக் காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில், நடிகை சன்னி லியோன் மறைந்தால் எந்தமாதிரியான காட்சிகள் ஒலிபரப்புவார்கள் என்று டுவிட்டரில் கேட்டிருந்தார். 

இந்த நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை கஸ்தூரி மீது, சமூக நீதி சத்ரிய பேரவையின் தலைவர் பொன்குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை கஸ்தூரி, சாதி கலவரத்தை தூண்டும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிடுவதாக அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.