Asianet News TamilAsianet News Tamil

விண்வெளி திட்டங்களில் இந்தியாவை காட்டிலும் 7 மடங்கு அதிகம் செலவிடும் சீனா.... பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியா அதிரடி...!!

விண்வெளி திட்டங்களுக்கான செலவு செய்வதில் முன்னணி நாடுகளை காட்டில் பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

compare with India china invest in space research 7 time multi full  - India budget research note
Author
Delhi, First Published Feb 1, 2020, 9:54 AM IST

விண்வெளி துறையில் முன்னணியில் உள்ள நாட்டிலும் இந்தியா விண்வெளி திட்டங்களில் குறைவாகவே முதலீடு செய்கிறது.  விண்வெளி திட்டங்களில் நம் நாட்டை காட்டிலும் 7 மடங்கு அதிகமாக செலவிடுகிறது என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

compare with India china invest in space research 7 time multi full  - India budget research note  

அதில் பல்வேறு ருசிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. விண்வெளி துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வந்தாலும், விண்வெளி திட்டங்களுக்கான செலவு செய்வதில் முன்னணி நாடுகளை காட்டில் பின்தங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  2018ல் இஸ்ரோ விண்வெளி திட்டங்களுக்காக 150 கோடி டாலர் மட்டுமே செலவிட்டது. அதேசமயம் சீனாவின் விண்வெளி அமைப்பான சி.என்.எஸ்.ஏ.  1100 கோடி டாலரை விண்வெளி திட்டங்களில் செலவிட்டுள்ளது. 

compare with India china invest in space research 7 time multi full  - India budget research note

அமெரிக்காவோ விண்வெளி திட்டங்களில் 1950 கோடி டாலரை வாரி இறைத்துள்ளது. அதாவது சீனாவும் அமெரிக்காவும் இந்தியா விண்வெளி திட்டங்களுக்காக செலவிட்ட தொகையை காட்டிலும் முறையே 7 மற்றும் 13 மடங்கு அதிகம் செலவிட்டுள்ளன. 2018ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் எத்தனை செயற்கோள்களை விண்ணுக்கு ஏவியுள்ளன என்ற பட்டியில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios