Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்காவில் இருந்து வந்ததும் நெஞ்சரிய வைப்பேன்... ஜோதிமணி எடுத்த அதிரடி சபதம்..!

அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் என்னைப்பற்றி விமர்சிப்பவர்களின் நெஞ்செரியும் வகையில் செயல்படுவேன் என கரூர் காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி தெரிவித்துள்ளார். 
 

Coming out of America  Vows taken by the jothymani
Author
Tamil Nadu, First Published Nov 4, 2019, 2:30 PM IST

சர்வதேச பெண் அரசியல்வாதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்ற ஜோதிமணியை விமான நிலையத்தில் வழியனுப்ப சென்ற திமுக எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி, இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த் பதிவில் ஜோதிமணி திடீரென மாடர்ன் ட்ரெஸ் போட்டிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

 Coming out of America  Vows taken by the jothymani

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜோதிமணி, ‘’ஏன் எப்போதும் பெண்ணின் உடை விவாதத்துக்கு உள்ளாகிறது? ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தின் மீது மற்றவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது? அனைத்து ஆண்களும் குறிப்பாக உடை குறித்து விமர்சிப்பவர்கள், தமிழ்க் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வேட்டி அணிகின்றனரா? மற்றவர்களை மதிப்பதுதான் தமிழ்- இந்தியக் கலாச்சாரம். அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.Coming out of America  Vows taken by the jothymani

காட்டன் புடவைகள், ஜீன்ஸ், ஷார்ட் ஷர்ட்டுகள் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தமான உடைகள். நான் திரும்பி வந்தவுடன், அவற்றில் சிலவற்றை நீங்கள் மேலும் நெஞ்செரியும் வகையில் பதிவிடுவேன். அதுவரை, கலாச்சாரம் என்றால் என்ன எனத் தேடுங்கள். பெண்களுக்கு மட்டும் முன்னோக்கிச் செல்வதில் ஏன் இத்தனை சுமைகள்? ஏன் ஆண்களுக்கு இல்லை.

Coming out of America  Vows taken by the jothymani

பெண் தலைவர்கள் தங்கள் தோற்றம், உடை, சிரிப்பு, மண வாழ்வு ஆகியவற்றின் அடிப்படையில் எப்படி தாக்கப்படுகிறார்கள் என்பதும் ஆண்கள் ஏன் அவ்வாறு அணுகப்படுவதில்லை என்பது குறித்தும் விவாதிப்பதே இந்தக் கூட்டம். பெண்கள் மீதான இந்த வெறுப்பை எதிர்த்துதான் நாங்கள் உறுதியுடன் போராடுகிறோம். எங்களுடன் இணைந்திருக்கும் அனைத்து ஆண்களுக்கும் நன்றி," என ஜோதிமணி பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios