மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி 36 இடங்களிலும் அதிமுக கூட்டணி இரண்டு இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. 

தர்மபுரி மக்களவை தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி முன்னிலை, சிதம்பரம் மக்களவை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை பெற்றுள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார்.  

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் 9, 828 வாக்குகளை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் 26 ஆயிரத்து 155 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். 

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 15 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகித்து பாமக வேட்பாளர் சாம்பாலை பின்னுக்குத் தள்ளி இருக்கிறார். நெல்லை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞான திரவியம் 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகிக்கிறார். திருச்சி மக்களவை தொகுதியில் காங். வேட்பாளர் திருநாவுக்கரசர் 18 ஆயிரம் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி காத்திருக்கிறார். 

பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பாரிவேந்தார் 18 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.சிவகங்கை மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை விட, காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 16 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வகித்து நாடாளுமன்றத்தை நோக்கி காத்திருக்கிறார்.