இந்தியாவில் பிற மாநிலங்களை காட்டிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிகச் சிறந்து விளங்குகிறது. முதல்வர் எடப்பாடியாரும், அமைச்சர்களும் சுற்றிச் சுழன்று களப்பாணியாற்றி மக்களின் அச்சத்தை போக்கி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் நோயின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் உலகமே தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவித்தும் யாரும் அதை கேட்டு அடங்கி இருப்பதாக தெரியவில்லை. சீனாவில் டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் இப்பொழுது பற்றி பரவியுள்ளது.

\

இந்நிலையில், தமிழக அமைச்சர்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றனர்.  உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், ஆடம்பர மாளிகைக்குள் இருந்து உத்தரவை போட்டு கடமை முடிந்து விட்டது என நினைக்காமல், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ள நிலைமையிலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் விசிட் அடித்து மருத்துவமனைகளை சோதனையிட்டு வருகிறார். 

\

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பொதுமக்களை சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 24 மணி நேரமும் அசராது கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவரைப் போலவே  அமைச்சர்கள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் , எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மக்களுக்காக களப்பணியாற்றி வருகின்றனர். 

அதேபோல்,திருத்தங்கல், சிவகாசி பகுதிதிகளில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கிருமி நாசினி தெளித்து களப்பணியாற்றி வருகிறார். எத்தனி பெரிய வைரஸ் வந்தாலும், அதனை துரத்த நாங்கள் இருக்கிறோம் என அமைச்சர்கள் களப்பணியாற்றி நிரூபித்து வருவதால் மக்கள் அச்சம் தீர்ந்து அவர்களது பணியை பாராட்டி வருகின்றனர்.