பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து அவ்வீடுகள் கட்டப்பட்டதாகவும், எனவே சென்னை உயர்நீதிமன்றம் அந்த வீடுகளை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில்  காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் அக்குடியிருப்புகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உண்மையான முதல்வராக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் வந்து பார்க்க வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களை ஒரு தனி நபருக்காக அவர்களின் வீடுகளை இடித்து அப்புறப்படுத்துவது நியாயமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். சென்னை ராஜா அண்ணாமலை புரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் எனக்கூறி 250க்கும் மேற்பட்ட வீடுகள் அகற்றப்பட்டு வரும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு கூறியுள்ளார். அதிமுக திமுக யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னையில் குடிசை வாழ் மக்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தொடர்கிறது. இப்போது திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் சென்னை ராஜா அண்ணமாலை புரம் பகுதியில் 250க்கும் அதிகமான வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. 

பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து அவ்வீடுகள் கட்டப்பட்டதாகவும், எனவே சென்னை உயர்நீதிமன்றம் அந்த வீடுகளை அகற்ற உத்தரவிட்டுள்ள நிலையில் காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் அக்குடியிருப்புகளை அகற்றி வருகின்றனர். இந்நிலையில் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது வீடுகள் இடிக்கப்படுவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்களும் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். கோவிந்தசாமி நகர் குடியிருப்புகள் அகற்றும் இடத்தை தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெண் ஒருவர் இதுவரை தமிழக அரசின் சார்பில் அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ யாரும் தங்களை வந்து சந்திக்கவில்லை என கூறி கதறினார். இதையடுத்து செய்தியாளர் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், 

கோவிந்தசாமி காலனியில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்த மக்களை அப்புறப்படுத்தி, அவர்களின் குடியிருப்புகளை இடித்து அவர்கள் நடுத்தெருவில் நிற்கும் அளவிற்கு இந்த அரசு அவர்களை தள்ளியுள்ளது. ஒரு தனி நபருக்காக 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்றுவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பிய பிரேமலதா, ஒரு வருடத்தில் திமுக அரசு என்ன சாதித்தது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் வாழும் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைமை பார்க்கும் பொழுது மனது வேதனை அளிக்கிறது என கூறினார். உண்மையான முதல்வராக இருந்தால் பாதிக்கப்பட்டுள்ள கோவிந்தசாமி நகர் மக்களை ஸ்டாலின் நேரில் சந்திக்க வந்து பார்க்க வேண்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.