Asianet News TamilAsianet News Tamil

காலேஜ் ஸ்டுடென்ட்டுக்கு ஜாக்பாட்...! 2GB டேட்டாவை ஃபிரீயா கொடுத்த எடப்பாடியார்...!

தமிழகம் முழுவதும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் தினமும் 2 ஜிபி இலவச இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார்.

college student 2GB data free...edappadi palanisamy Announcement
Author
Chennai, First Published Jan 10, 2021, 10:55 AM IST

தமிழகம் முழுவதும் 9.69 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் தினமும் 2 ஜிபி இலவச இன்டர்நெட் டேட்டா வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளார்.

 இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: கொரோனா பெருங்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணைய வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.

college student 2GB data free...edappadi palanisamy Announcement

இந்த இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணவர்களுக்கு ஜன., முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு (இன்டர்நெட் டேட்டா) பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள் வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். 

college student 2GB data free...edappadi palanisamy Announcement

தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா தரவு அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டுமென்று மாணவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios