'தி.மு.க.,விற்கு, தங்கள் பலம் என்ன என்பதை சட்டமன்றத்தேர்தலுக்கு முன் காட்டி சீட்டுக்களை அதிகமாக கேட்க முடிவு செய்திருக்கு அதன் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட்.

 

''மதுரையில் நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநாடு நடக்க இருக்கிறது. தேர்தலுக்காகத்தான், இந்த மாநாடு நடத்துகிறோம் என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டுள்ளார். தி.மு.க., கூட்டணியில், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, இம்முறை ஒற்றை இலக்கத்தில் தான், 'சீட்' கொடுக்க தீர்மானித்து இருக்கிறது திமுக. ஆனால், இரட்டை இலக்கத்தில், சீட் வேண்டும் என அக்கட்சியினர், தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். 

கம்யூனிஸ்டு கோரிக்கையை, தி.மு.க., கண்டுகொள்ளவில்லை. அதனால், மாநாடு நடத்தி, 'பவரை' காட்டினால்தான், கேட்கும் சீட் கிடைக்கும் என தோழர்கள் கணக்கு போட்டு வருகிறார்கள். மாநாட்டில் பேருரையாற்றுவது, ஸ்டாலின் தான். அவர், கம்யூனிஸ்ட் கட்சிக்கு கூடும் கூட்டத்தைப் பார்த்து, இரட்டை இலக்கத்தில் என நம்புகிறோம். அதனை இந்த மாநாடு தான் தீர்மானிக்கும் என்கிறார்கள் கம்யூனிஸ்டு தோழர்கள்.