தமிழகத்தில் 22 நட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் அவற்றில்  18 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.  மீதமுள்ள அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளின் மே 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

திமுக தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நிலையில், அதிமுக ஏப்ரல் 21 ஆம் தேதி விருப்ப மனு வாங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் சூலூர் கொங்கு மண்டலத்தில் வருகிறது, ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் இரண்டும் தென் தமிழகத்தில் வருகிறது. இந்த மூன்று தொகுதிகளை விட கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியைதான் சற்று கடினமாக கருதுகிறது அதிமுக.

முன்னாள் அமைச்சரும், அமமுகவில் இருந்து திமுகவுக்கு சென்றவருமான செந்தில்பாலாஜி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரை வீழ்த்துவது எப்படி என்ற வியூகம்தான் இப்போது அதிமுகவில் வகுக்கப்பட்டிருக்கிறது.
 
அதே நேரத்தில் கரூர் மாவட்டத்தில் செந்தில்பாலாஜியின் அரசியல் செல்வாக்கு  எந்த வகையிலும் ஓங்கக் கூடாது என்பதில் அமைச்சர் விஜயபாஸ்கரும் தீவிரமாக இருக்கிறார். செந்தில்பாலாஜியைப் பொறுத்தவரை  எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். மேலும் செநிதல் பாலாஜி  இடைத்தேர்தல் வேலைகளை கடந்த சில மாதங்களாகவே தொடங்கிவிட்டார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜியைத் தேர்ற்கடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புது வியூகம் ஒன்றை அமைந்துள்ளார். அதாவது , செந்தில்பாலாஜிக்கு கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை நிறுத்தாமல் இஸ்லாமியர் ஒருவரை நிறுத்வது என்பது தான் அந்த முடிவு.

அதாவது அதிமுகவைப் பொறுத்தவரை கவுண்டர் சமுதாய வாக்குகள் எப்படியும் வந்துவிடும். அதனால் அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கிறார்கள். அந்த தொகுதியில் சுமார் 60 ஆயிரம் ஓட்டுகள் முஸ்லிம்களுடையதுதான். 

எனவே செந்தில்பாலாஜிக்கு எதிராக ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தினால், சிறுபான்மை மக்களின் நம்பிக்கையையும் பெறலாம். செந்தில்பாலாஜிக்கும் ஆப்பு  வைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.