இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

cm stalin wrote letter to pm modi regarding tn fisherman shot by the Indian Navy

இந்தியக் கடற்படையினரால் தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மயிலாடுதுறையைச் சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் தமிழக மீனவர் வீரவேல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குண்டு பாய்ந்து மீனவர் வீரவேல் படுகாயமடைந்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் வரும் நிலையில் இந்தியக் கடற்படை தமிழக மீனவர்கள் மீது தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

இந்த நிலையில் தமிழக மீனவர் சுடப்பட்ட விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (21-10-2022) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது.

இதையும் படிங்க: தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு.. கொந்தளித்த ராமதாஸ்... 25 லட்சம் கேட்டு அறிக்கை.

இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை பிரதமர் நன்கு அறிவார்கள். இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே, பிரதமர் மோடி இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios