Asianet News TamilAsianet News Tamil

இந்திய கடற்படையினரால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு நிவாரணம்... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

இந்திய கடற்படையால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

cm stalin announced Relief to the tn fisherman who was shot by the Indian Navy says
Author
First Published Oct 21, 2022, 5:00 PM IST

இந்திய கடற்படையால் சுடப்பட்ட தமிழக மீனவருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் வங்க கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் அவரை பிந்தொடர்ந்தனர். அப்போது, வீரவேல் படகை நிறுத்தாமல் சென்றதால் அவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் மீனவர் வீரவேல் பலத்த காயம் அடைத்தார். இதை அடுத்து காயமடைந்த மீனவர் வீரவேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு.. கொந்தளித்த ராமதாஸ்... 25 லட்சம் கேட்டு அறிக்கை.

இந்த நிலையில் இலங்கை கடற்படையில் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு நிவாரணம் அறிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வீரவேல், காசிராஜன் என்பவர், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கியவருக்கு ஓடி வந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்.. அண்ணா சாலையில் நம்ம CM செய்த தரமான சம்பவம்..

சம்பவத்தில் காயைமடைந்த வீரவேல்,  சிகிச்சைக்காக உடனடியாக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு இலட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios