தமிழ்மொழிக்கும்‌ உலகமொழிகளுக்கும்‌ இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின்‌ தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற செம்மொழித் தமிழ் விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார். 

தமிழ்மொழிக்கும்‌ உலகமொழிகளுக்கும்‌ இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின்‌ தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.இன்று நடைபெற்ற செம்மொழித் தமிழ் விருது விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ” சென்னையில்‌ செயற்பட்டு வரும்‌, செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனம்‌ 41 செவ்வியல்‌ தமிழ்‌ நூல்களின்‌ ஆய்வுக்கு முதலிடம்‌ வழங்கி வருகிறது. ஒன்றிய அரசினுடைய வழிகாட்டுதலோடு, தமிழ்நாடு அரசின்‌ நெறிப்படுத்தலோடு, சிறந்ததொரு மொழிப்‌ பணியினைச்‌ செம்மொழி நிறுவனம்‌ மேற்கொண்டு வருகிறது.

மேலும் படிக்க:அலர்ட் !! சென்னை உயர்நீதிமன்றத்தில் காலி பணியிடங்கள்.. இன்று தான் கடைசி நாள்.. முழு விவரம்

தொல்பழங்காலம்‌ முதல்‌ கி.பி. 6ஆம்‌ நூற்றாண்டு வரையிலான காலப்‌ பகுதிக்குள்‌ தோன்றிய இலக்கிய, இலக்கணம்‌ குறித்த ஆய்வினை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம்‌ தமிழ்‌ மொழி ஆய்விலும்‌, அதன்‌ மேம்பாட்டிலும்‌ தனிக்‌ கவனம்‌ செலுத்தி வருகிறது. செம்மொழித்‌ தமிழின்‌ தொன்மையையும்‌ தனித்‌ தன்மையையும்‌ அவற்றின்‌ மரபுத்‌ தொடர்ச்சியையும்‌, ஆராய்ந்து பாதுகாப்பதை முக்கிய நோக்கமாக இந்த நிறுவனம்‌ மேற்கொண்டிருக்கிறது. இவற்றை அடிப்படையாகக்‌ கொண்டு திட்டங்கள்‌ வகுக்கப்பட்டு ஆய்வுப்‌ பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனத்துக்குத்‌ தேவையான அனைத்து வசதிகளையும்‌ செய்து தருவதற்குத்‌ தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால்‌, இது தமிழ்‌ மொழிக்கான அமைப்பு. ஏனென்றால்‌ இன்று நடப்பது தமிழின்‌ ஆட்சி, தமிழின ஆட்சி. செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனம்‌ அமைந்துள்ள சாலையைச்‌ “செம்மொழிச்‌ சாலை எனப்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்து நமது அரசு செயல்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க:போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு...! ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தைக்கு தேதி அறிவித்த தமிழக அரசு

தமிழ்‌ மொழியின்‌ தொன்மை, வன்மை, திண்மை, பொருண்மை, சான்றாண்மை ஆகியவற்றை நிறுவி இருந்தாலும்‌, தமிழ்மொழிக்கும்‌, உலகமொழிகளுக்கும்‌ இடையிலான உறவை, தொடர்பை ஆணித்தரமாக நிறுவ வேண்டியது காலத்தின்‌ தேவை. அதற்கான அடித்தளத்தைத்‌ தனிநாயகம்‌ அடிகள்‌, பாவாணர்‌ போன்ற மொழிப்‌ பேரறிஞர்கள்‌ இட்டுச்‌ சென்றிருந்தாலும்‌, அதை அடுத்த கட்டத்திற்குக்‌ கொண்டு சென்று தமிழ்மொழிக்கும்‌ உலக மொழிகளுக்கும்‌ இடையிலான ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உருவெடுத்துள்ளது.

அண்மையில்‌ கூட, இந்தியப்‌ பிரதமரை நான்‌ வரவேற்றபோது செம்மொழி வனம்‌ வெளியிட்ட தொல்காப்பியம்‌, ஆங்கில மொமிபெயர்ப்பை அன்பளிப்பாகத்‌ தந்தேன்‌. செம்மொழித்‌ தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மேலும்‌ வளப்படுத்தவும்‌ தமிழ்‌ மொழியின்‌ வளர்ச்சியிலும்‌, தமிழ்‌ நிறுவனங்களின்‌ வளர்ச்சியிலும்‌ கவனம்‌ செலுத்தி ஆக்கபூர்வமான பணிகளை தொழில்கள்‌, தமிழ்‌ ஆட்சி மொழி மற்றும்‌ தமிழ்ப்‌ பண்பாடு, தொல்லியல்‌ துறை அமைச்சர் தங்கம்‌ தென்னரசு மேற்கொண்டு வருகிறார்‌. தமிழ்மொழிக்கும்‌, வளம்‌ சேர்க்கும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்த பல திட்டங்களைச்‌ செம்மொழி நிறுவனம்‌ மேற்கொண்டு வருகின்றது. செம்மொழி நிறுவனம்‌ முன்வைத்துள்ள இலக்குகளை அடையத்‌ தமிழ்நாடு அரசு எப்போதும்‌ துணைநிற்கும்‌ என்று அவர் பேசி முடித்தார். 
மேலும் படிக்க:இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம், காத்திருங்கள்... ஸ்டாலின் அறிவிப்பால் அலறும் சென்னை!!!