Asianet News TamilAsianet News Tamil

குஜராத் போல் நாம் கிடையாது.. ஆனால் அது நினைத்து சந்தோஷம் பட முடியாது.. முதலமைச்சர் ட்விஸ்ட் பேச்சு..

போதை பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களது சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டுமெனவும் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
 

CM Stalin Speech
Author
Tamil Nadu, First Published Aug 10, 2022, 11:17 AM IST

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருள் நுழைவதை தடுக்க முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க கூட்டு முயற்சி அவசியம் என்று அவர் கூறினார். பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருட்கள் விற்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் தெரிவித்தார். பஞ்சாப், குஜராத் மாநிலங்களை விட தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறைவு என்று சமாதானம் அடைய முடியாது என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க:ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து திமுகவிற்கு பணம்..! எவ்வளவு வருகிறது தெரியுமா..? பகீர் கிளப்பிய இபிஎஸ்

ஏற்கனவே அறிவித்தப்படி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. போதைப் பொருட்கள் சாதி, மத தூண்டுதல்களுக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. போதையின் பாதையில் செல்லாமல் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். போதை பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களது சொத்துக்களை முடக்கம் செய்ய வேண்டும் என்றும் போதை என்பது அதனை பயன்படுத்தும் தனிநபர் பிரச்சனை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க:இதுதான் திராவிட மாடலா? திமுகவை எதிர்க்கும் விசிகவினர்.. சாட்டையை சுழற்றிய திருமாவளவன் !

தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்று குறிப்பிட்ட முதல்வர், இது ஒரு சமூக பிரச்சனை என்று கூறினார். மேலும் போதை பொருள்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற கொடூர குற்றங்கள் நடைபெற காரணமாக அமைந்துவிடுகிறது என்று குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி தங்கள் குழந்தைகள் போதைப்பொருள் பயன்படுத்துக்கிறார்களா என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர், எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு, போதைப்பொருள் விஷயத்திலும் வளர்ந்துவிடக் கூடாது  என்று விளக்கினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios