நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ மூலம்‌ கடந்த நிதி ஆண்டில்‌ 79 ஆயிரம்‌ இளைஞர்களுக்குத்‌ இலவச திறன்‌ மேம்பாட்டு பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு, அவர்களுக்கு வேலைவாய்ப்பும்‌ உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையிலுள்ள இராணி மேரி கல்லூரியில்‌ நடைபெற்ற மாநில அளவிலான முதல்‌ இளைஞர்‌ திறன்‌ திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான்‌ முதல்வன்‌” திட்டத்தின்‌ மூலம்‌ ஆண்டுக்கு 10 இலட்சம்‌ இளைஞர்களுக்கு கல்வி, அறிவு மற்றும்‌ திறன்‌ உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ மூலம்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகமானது, அரசுக்‌ கல்லூரிகளில்‌ வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பங்களில்‌ அதற்கேற்ற பயிற்சிகளை வழங்கிடப்‌ பெருநிறுவனங்களோடு ஒப்பந்தம்‌ ஏற்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெறக்கூடிய திறன்‌ பயிற்சிகள்‌ நடத்தப்பட இருக்கிறது.

நான்‌ முதல்வன்‌ திட்டத்தின் கீழ்‌ மாறிவரும்‌ தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை மேம்படுத்த சர்வதேச பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ தொழில்துறை சங்கங்களுடன்‌ இணைந்து செயல்பட, தமிழ்நாட்டில்‌ அதிக அளவிலான தொழில்‌ நிறுவனங்கள்‌
கொண்ட துறைகளில்‌ திறன்மிகு மையங்களை உருவாக்குதல்‌, 21- ஆம்‌ நூற்றாண்டிற்கான திறன்கள்‌ மற்றும்‌ தகவல்‌ தொடர்புத்‌ திறன்களை அனைத்துக்‌ கல்வி நிறுவனங்களிலும்‌ வழங்கி நமது இளைஞர்களைத்‌ திறன்‌ மிக்கவர்களாக மாற்ற வேண்டும்‌. இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம்‌ மாநில அளவிலான முதல்‌ “இளைஞர்‌ திறன்‌ திருவிழா” மிகச்‌ சிறப்பாக நடைபெற்றுக்‌ கொண்டிருக்கிறது.
இந்த இளைஞர்‌ திறன்‌ திருவிழாவானது. தமிழகத்தின்‌ 388 வட்டாரங்களில்‌ 1 கோடியே 94 லட்சம்‌ ரூபாய்‌ செலவில்‌ நடத்தப்படும். தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ மூலம்‌ கடந்த நிதி ஆண்டில்‌ 79 ஆயிரம்‌ இளைஞர்களுக்குத்‌ திறன்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு, அவர்களின்‌வேலைவாய்ப்பும்‌ உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

இளைஞர்கள்‌ அதிக வேலைவாய்ப்புள்ள தொழில்களைப்பற்றி அறிந்து கொள்வதோடு, திறன்‌ மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும்‌ தகவல்களும்‌ ஒருங்கே கிடைக்கப்பெற்று, சிறந்த வேலைவாய்ப்புகளைப்‌ பெற வழிவகை செய்யும்‌
நேரத்தில்‌, இந்த ஆண்டு முதல்‌ இளைஞர்‌ திறன்‌ விழாக்கள்‌ நடத்தப்படுகின்றன .அரசு பொறுப்பேற்றவுடன்‌ சென்ற நிதியாண்டில்‌ தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ மூலம்‌ சுமார்‌ 79,000 இளைஞர்களுக்கு பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வேலைவாய்ப்பும்‌ உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இத்தகைய பயிற்சிகள்‌ அனைத்தும்‌ இலவசமாகவே இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 

இப்பயிற்சிகள்‌ தனியார்‌ வெளிமுகமைகள்‌ மூலமாகவும்‌ அரசு நிறுவனங்கள்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ மூலமாகவும்‌ வழங்கப்படுகின்றன. எனவே, நம்‌ இளைஞர்கள்‌ அனைவரும்‌ நான்‌ முதல்வன்‌ திட்டத்தை தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும்‌ என்று முதலமைச்சர் பேசினார். இந்த இளைஞர்‌ திறன்‌ திருவிழா நிகழ்ச்சியில்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ ழுக்கள்‌ உற்பத்தி செய்யும்‌ பொருட்களின்‌ விற்பனை அரங்குகளை முதலமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திறன்‌ பயிற்சிக்குத்‌ தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு, திறன்வளர்ப்பு பயிற்சி சேர்க்கைச்‌ சான்றிதழ்களையும்‌, தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும்‌, 608 மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்களுக்கு 25 கோடியே 66 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பிலான வங்கிக்‌ கடன் இணைப்புகளையும்‌ வழங்கப்பட்டது.

மேலும் படிக்க: மத்திய அரசிடம் சண்டை போடக்கூடாது.. சமாதானமாக திட்டங்களை கேட்டு பெற வேண்டும்.. முதல்வருக்கு சசிகலா ஆலோசனை.