பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. ஆளுநர் ரவி மீது புகார் அளிக்க திட்டம்?
சென்னை வரும் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திக்க உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினும் சந்திக்கிறார்.
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து பிரதமரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மூன்று மணியளவில் திறந்து வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஐஎன்எஸ் அடையார் விமானப்படை தளத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றடைகிறார். அங்கிருந்து கார் மூலமாக சென்னை சென்டரல் ரயில் நிலையத்திற்கு மாலை 4 மணி அளவில் செல்லும் மோடி, சென்னை - கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பின்னர், பல்லாவரம் ராணுவ மைதானம் சென்று அங்கு பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இதையும் படிங்க;- மோடியின் தரிசனத்திற்காக காத்திருக்கும் தொண்டர்கள்.! திருவிழாவாக கொண்டாட காத்திருக்கும் மக்கள்- அண்ணாமலை
இந்நிலையில், சென்னை வரும் பிரதமர் மோடியை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்திக்க உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினும் சந்திக்கிறார். சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் 3 நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனையடுத்து, பிரதமரை வழியனுப்பும் நிகழ்வின் போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க உள்ளார்.
இதையும் படிங்க;- தமிழகம் வரும் மோடி..! உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை- பிரதமரின் பயண திட்டம் என்ன தெரியுமா.?
அப்போது, தமிழகத்திற்கு கூடுதல் நிதிகள், ஜிஎஸ்டி நிலுவை தொகை, ஆன்லைன் ரம்மி, நீட் தேர்வு விலக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் மனு வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.