மோடியின் தரிசனத்திற்காக காத்திருக்கும் தொண்டர்கள்.! திருவிழாவாக கொண்டாட காத்திருக்கும் மக்கள்- அண்ணாமலை
பரதநாட்டியம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மேளதாளங்கள், என்று பிரதமரின் வாகனம் செல்லும் பாதை எல்லாம் வண்ணக்கோலங்கள் ஆக திசையெல்லாம் நடைபெறும் திருவிழாவாக, தமிழக மக்கள் மகத்தான வரவேற்பை அளிக்கக் காத்துக் கொண்டிருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் மோடி
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வர உள்ளார். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ளும் மோடி நாளை மறுதினம் நீலகிரி மாவட்டம் செல்ல உள்ளார். இந்தநிலையில் பிரதமர் மோடியை வரவேற்பது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தமிழகத்திற்கு வருகை தரும் போதெல்லாம் தமிழகத்தில் ஒரு திருவிழா கொண்டாட்டமாக இருந்து வருகிறது. பல்வேறு அரசு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை தரும் பாரதப்பிரதமர் அவர்களை வரவேற்பதற்காக சாலையின் இருபக்கமும், அன்பின் மிகுதியில் பொதுமக்களும், பாரதிய ஜனதா கட்சியின் ஏராளமான தொண்டர்களும், திரளாக நின்று வரவேற்க இருக்கிறார்கள்.
திருவிழாவாக தமிழகம்
தங்கள் அன்புத் தலைவரைக் காண்பதற்காக, அதிலும், வேகமாக விரையும் பாரத பிரதமரின் வாகன வரிசையில், அவரைக் காணக்கிடைக்கும் நொடி நேர தரிசனத்திற்காக, சாலையின் இருமருங்கிலும், நின்று வரவேற்க காத்திருக்கும் கட்சித் தொண்டர்களின் அன்பிற்கும் எல்லையே இல்லை. தமிழக மக்கள் மீது தனிப்பட்ட அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டிருக்கும் பிரதமர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பல கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பரதநாட்டியம், கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மேளதாளங்கள், என்று பிரதமரின் வாகனம் செல்லும் பாதை எல்லாம் வண்ணக்கோலங்கள் ஆக திரும்பும் திசையெல்லாம்
வரவேற்க தயாராகுங்கள்
திருவிழாவாக, தமிழக மக்கள் மகத்தான வரவேற்பை அளிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் ஒவ்வொரு அணி மற்றும் பிரிவின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என்று அனைவரும் வெற்றிகரமாய் இந்த வரவேற்பினை நிகழ்த்திக் காட்டிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்