Asianet News TamilAsianet News Tamil

அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடைய வேண்டும்... ஆட்சியர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

அனைத்து திட்டங்களும் மக்களை முழுமையாக சென்று சேர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

cm stalin instruction to collectors that all schemes must reach people
Author
First Published Feb 2, 2023, 8:28 PM IST

அனைத்து திட்டங்களும் மக்களை முழுமையாக சென்று சேர வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தின் கீழ், முதல்வர் மு.க.ஸ்டாலின், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கிவைப்பதோடு பல கட்டிடங்களையும் திறந்து வைத்து வருகிறார். நேற்று வேலூர் மாவட்டத்திற்கு சென்ற அவர், அங்கு காட்பாடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் தமிழ்நாடு மூலம் 784 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5351 புதிய பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள் கட்டும் பணிக்கான குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, விஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி மாணவர் விடுதி மற்றும் பேரில் ஆராய்ச்சிக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதையும் படிங்க: கடலில் பேனா வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும்... அன்புமணி ராமதாஸ் கருத்து!!

அதைத்தொடர்ந்து இன்று (பிப்.2) காலை சத்துவாச்சாரியில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார நல மையக் கட்டடத்திற்கான  கட்டுமானப் பணிகள் மற்றும் வேலூர் அரசு ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கருதித்தான் இந்தக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். மக்களுக்காகத்தான் அரசு. மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் ஒரு நல்லரசாக அமைந்திட முடியும். இதை நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீர்கள். அந்த எண்ணத்தை நெஞ்சில் ஏந்தித்தான் நாம் அனைவரும் செயல்பட்டாக வேண்டும்.

இதையும் படிங்க: இபிஎஸ்-ஐ இடைக்காலப் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க இயலாது.. அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!!

குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், வருவாய்த் துறை வழங்கக்கூடிய பட்டா மாறுதல் உள்ளிட்ட சேவைகள், ஊரக மேம்பாடு, விளிம்பு நிலை மக்களுடைய நலன், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு, பொதுக் கட்டமைப்பு வசதிகள், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைகளைச் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் அதனுடைய பயன் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் இந்த ஆய்வில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். மாவட்ட அளவில் இருக்கும் நீங்கள் உங்களது மாவட்ட எல்லைக்குட்பட்ட பணிகளை உன்னிப்பாக, கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் முழுமையாக மக்களை போய் சென்றடையும். அடுத்த, அடுத்த மாதத்தில் தமிழ்நாடு அரசினுடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் ஆக இருக்கிறது. அதன்பிறகு, அமைச்சருடைய துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது. புதியபுதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios