Asianet News TamilAsianet News Tamil

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

cm stalin announced 3 lakhs to the families of those who died in jallikattu
Author
First Published Jan 22, 2023, 7:31 PM IST

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பொங்கலையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்று மாடுபிடி வீரர்கள் சிலர் படுகாயமடைந்ததோடு சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: திமுகவிற்கு இனி நாள் தோறும் அமாவாசை தான்… முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி!!

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டம், கே.ராயவரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த கணேசன் (வயது 58), சிவகங்கை மாவட்டம், சிராவயலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் போட்டித் திடலுக்கு வெளியிலிருந்த பூமிநாதன் (வயது 52) மற்றும் தருமபுரி மாவட்டம், தடங்கத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை சேகரிக்கும் இடத்தில் நின்றிருந்த கோகுல் (வயது 14) ஆகியோரை போட்டியில் பங்குபெற்ற காளைகள் எதிர்பாராத விதமாக முட்டியதால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற துயரச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையுற்றேன்‌.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்.? கடைசியில் நடந்த திடீர் ட்விஸ்ட் !

இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.  

Follow Us:
Download App:
  • android
  • ios