திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை ஆர்.கே.சாலையில் அரசுப் பேருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஓராண்டு நிறைவு
திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி
இதனையடுத்து, மெரினா கடற்கரை சாலையில் இருக்கக்கூடிய கலைஞர் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அறிவாலயத்திற்கு செல்வதற்காக ராதாகிருஷ்ணன் சாலையில் அவரது கான்வாய் வாகனம் சென்றது. அப்போது, ராதாகிருஷ்ணன் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காரை நிறுத்த சொன்ன முதல்வர். அங்கு சாதாரண பேருந்து வருவதற்காக சிறிது நேரம் காத்திருந்தார்.

மாநகர பேருந்தில் ஸ்டாலின்
அப்போது, பெரம்பூரில் இருந்து பெசன்ட் நகர் செல்லக்கூடிய 29C என்ற மாநகர பேருந்து வந்ததும் மக்களோடு மக்களாக ஏறி முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். பெண்களுக்கு வழங்கக்கூடிய இலவச பேருந்து கட்டண டிக்கெட்ஆகியவை குறித்து நடத்துனரிடம் கேட்டறிந்தார்.

அதேபோல், அந்த பேருந்தில் பயணிக்கக்கூடிய பொதுமக்களிடம் பேருந்து நேரத்திற்கு வருகிறதா? இலவச டிக்கெட் சரியாக வழங்கப்படுகிறதா? என்பது குறித்து நேரடியாக கேட்டறிந்தார். சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மக்களோடு மக்களாக பேந்தில் முதல்வர் பயணம் செய்தார்.
