Asianet News TamilAsianet News Tamil

ஊழல் அமைச்சர்களுக்கு உதவி செய்யும் நீதிபதிகள் மீதும் நடவடிக்கை வேண்டும் - வானதி சீனிவாசன் கோரிக்கை

அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றம் செய்து வழக்கை முடித்துவைத்த நீதிபதிகள் மீதும் நடவடிக்கை வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

cm mk stalin should dismiss all ministers who are involved corruption says mla vanathi srinivasan in coimbatore vel
Author
First Published Dec 21, 2023, 6:46 PM IST

கோவை மாவட்ட பாஜக சார்பில் வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களுக்கு போர்வை, புடவை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாவட்டங்களுக்கு கோவை மாநகரில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் புடவை, போர்வை, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இங்கு இருந்து அனுப்புகின்றோம். அவர்களது வேதனையில் பங்கெடுக்க எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் பாரதிய ஜனதா கட்சி அதை முன் நின்று மக்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வட இந்தியா வியாபாரிகள் இந்த பொருட்களை வழங்கி உள்ளனர். மேலும் 1500 கிலோ அரிசி மூட்டைகளை சேகரித்து அதனை அனுப்புகிறோம். வடக்கு, கிழக்கு என பேசுகின்றவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்த பகுதியில் இருந்தாலும் கஷ்டப்படும் மக்களுக்கு ஒவ்வொரு இந்தியனும் உதவி செய்ய காத்துக் கொண்டு இருக்கின்றனர். இவர்களது எண்ணத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர பிரிவினை வாதமாக மக்களுடைய சிந்தனையை திசை திருப்பக் கூடாது என தெரிவித்தார்.

பொன்முடிக்கு உயர்நீதிமன்றம் அளித்துள்ள தண்டனை பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு ஒரு பாடம் - ராமதாஸ் கருத்து

திமுக அமைச்சர் பொன்முடி தண்டனை குறித்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி  சிறைக்கு சென்ற போது,  அமைச்சர் பதவியில் இருந்து நீக்காமல் இலக்கா இல்லாமல் செந்தில் பாலாஜி நீடிக்கப்பட்டு உள்ளார். இது மிகப்பெரிய அவமானம், தொடர்ச்சியாக இன்னொரு அமைச்சர் தண்டிக்கப்பட்டு உள்ளார். இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் இருந்தவர்களை நடவடிக்கை எடுத்து  அனைவரும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு மாநிலத்தின் முதல்வர் நேர்மையான ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும்.

பாஜக, பல்வேறு சந்தர்ப்பங்களில் திமுக முக்கிய தலைவர்கள் அமைச்சர்கள் நிர்வாகிகள் குடும்ப உறுப்பினர்கள் எப்படி ஊழலில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டு இருக்கிறோம் எனவும் நீதிமன்ற தீர்ப்பு அதனை உறுதி செய்து உள்ளதாக வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை; விழுப்புரத்தில் பல பகுதிகளில் தடை செ்யயப்பட்ட மின்சாரம்

மேலும் அமைச்சர் பொன்முடி  வழக்கை விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நீதிபதி ஒரு மாத காலத்திற்குள் ஓய்வு பெறக் கூடிய நிலையில் அமைச்சர் பொன்முடி மீதான விசாரணையை முடித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு நிர்வாக ஆணை மூலம் பொன்முடி வழக்கை மாற்றிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு உதவுகின்ற நீதித்துறை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்த வழக்கு சரியான முன்னுதாரணம்.

இன்று, நேற்று அல்ல பல்வேறு காலமாக தி.மு.க அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. மத்தியில் நேர்மையான நிர்வாகம் நடந்து வருகிறது. தி.மு.க என்றாலே லஞ்சம், ஊழல், துஷ்பிரயோகம் தான். சென்னை எண்ணூர் துறைமுகத்தில் எண்ணெய் கலந்தது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களோடு நாங்கள் இருக்கிறோம். வேண்டுமென்றே எண்ணெய்யை நிறுவனம் கசிய விட்ட அந்த நிறுவனத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுடைய பாதுகாப்பு மிக மிக முக்கியமானது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios