பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை; விழுப்புரத்தில் பல பகுதிகளில் தடை செ்யயப்பட்ட மின்சாரம்
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் நகரின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவள அமைச்சராக பதவி வகித்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.75 கோடி சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது அதிமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் கூறியதை அடுத்து இன்று தண்டனை விவரம் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டணையும், இருவருக்கும் தலா ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 30 நாட்கள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அதற்குள் மேல் முறையீடு செய்துகொள்ளலாம் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.
முன்னதாக விழுப்புரம் திமுக அலுவலகத்தில் வழக்கம் போல் இன்றும் வந்திருந்த தொண்டர்கள் தீர்ப்பை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் நகரின் பல பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் அளவிற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. மேலும் கட்சி அலுவலகத்தில் சேர்ந்திருந்த தொண்டர்கள் வருத்தத்துடன் திரும்பிச் சென்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D