முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் ரூ. 2,00,000 வழங்கினார். 

இதுக்குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,” கலைஞர்‌ கருணாநிதி அறக்கட்டளை சார்பில்‌ நலிந்தோர்‌ மருத்துவம்‌ மற்றும்‌ கல்வி உதவி நிதியாக இதுவரை ரூ. 5 கோடியே 55 இலட்சத்து 90 ஆயிரம்‌ வழங்கப்பட்டுள்ளது. 2012 ஜூன் மாதம்‌ முதல்‌ உதவித்‌ தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும்‌ 2015 ஆகஸ்ட்‌ மாதத்திலிருந்து ரூபாய்‌ 25 ஆயிரமாக உயர்த்தியும்‌ வழங்கப்படுகிறது. அந்த வகையில்‌ இன்று ரூ.2,00,000/ கழகத்‌ தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ வழங்கினார்‌.

மேலும் படிக்க:அதிர்ச்சி!! இரவோடு இரவு முயல் வேட்டை.. மின்சார வேலியில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..

கலைஞர்‌ கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ தனது சொந்த பொறுப்பில்‌ அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில்‌ வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில்‌ கிடைக்கப்பெறும்‌ வட்டித்‌ தொகையினைக்‌ கொண்டு, மாதந்தோறும்‌ ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித்‌ தொகையாக 2005 நவம்பர்‌ மாதம்‌ முதல்‌ 2007 ஜனவரி மாதம்‌ வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில்‌, 30வது புத்தகக்‌ கண்காட்சிமினை 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி அன்று திறந்து வைத்து தலைவர்‌ கலைஞர்‌ பேசுகையில்‌, கலைஞர்‌ கருணாநிதி அறக்கட்டளை சார்பில்‌, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்‌-பதிப்பாளர்‌ சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய்‌ வழங்கப்படும்‌ என அறிவித்தார். அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும்‌ வட்டித்‌ தொகையில்‌ 2007 பிப்ரவரி முதல்‌ தொடர்ந்து உதவித்‌ தொகை வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க:கள்ளக்குறிச்சி கலவரம்.. வாட்ஸ்அப் அட்மின்களை அலேக்கா தூக்கிய போலீஸ்.. 15 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

Scroll to load tweet…

2005 நவம்பர்‌ முதல்‌ இதுவரை ரூ. 5 கோடியே 58 லட்சத்து 90 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும்‌ தற்போது வங்கியின்‌ வட்டி விகிதம்‌ குறைந்துள்ளதால்‌ 2022, ஜூன்‌ மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில்‌ மருத்துவம்‌ மற்றும்‌
கல்வி உதவி நிதியாக மொத்தம்‌ 8 பேருக்கு தலா சூபாய்‌ 25 ஆயிரம்‌ வீதம் மொத்தம்‌ ரூ.2 லட்சம் இன்று அன்று கழகத்‌ தலைவர்‌ ஸ்டாலின்‌ வழங்கினார்‌. நிதி பெறுவோர்‌ வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால்‌. மூலம்‌ வரைவுக்‌ காசோலையாக அனுப்பப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி உதவி பெறுவோர்‌ விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது.