ஏற்கனவே உயிரை கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த அரசின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக “சீல் டவுன்” செய்ய வேண்டும்.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து சென்னை மற்றும் தமிழகம் தப்பிக்க வேண்டுமென்றால் “சீல் டவுன்” தான் ஒரே தீர்வு (தெரு அடைப்பு) என நாலும் தெரிந்த அறிவு ஜீவிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவிலேயே ஏன் இன்னும் சொல்லப்போனால் உலக தரத்தில், அருமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது எடப்பாடி அரசு என்பது தான் உண்மை. ஆனால் சில அதிகாரிகள் செய்த முட்டாள் தனத்தால் அல்லது திறமை குறைவால் மட்டுமே கோயம்பேடு கிளஸ்டர் வெடித்தது.

கிட்டத்தட்ட 38 மாவட்டங்களில் 7 கோடி மக்களை பாதுகாப்பது என்பது சாதாரண காரியம் அல்ல, எதிர்க்கட்சிக்காரர்களும், ஊடகங்களும் எளிதாக குற்றச்சாட்டும் விஷயங்களை கையாள்வது மிக சுலபமான காரியம் அல்ல. அதையும் தாண்டித் தான் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வெற்றிகரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
1.நோயாளிகளை கண்டறிதல்
2. தொடர்பு தடமறிதல் (காண்டாக்ட் டிரேசிங்)
3. தனிமைப்படுத்துதல் (குவாரண்டைன்)
4.சரியான மருத்துவ சிகிச்சை
5.அதிகப்படியான பரிசோதனைகள்
6.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி
7.குறைவான இறப்பு விகிதம்
என அனைத்து வழியிலும் சிறப்பான முறையில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே கூறியது போல் ஒரு சிலர் கோட்டை விட்டதால் சென்னையில் கொரோனா பூகம்பம் கிளம்பியுள்ளது. இதை தடுக்க அல்லது கட்டுப்படுத்த தமிழகமே தப்பிக்க ஒரே வழி பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தையும்“சீல் டவுன்” செய்வது மட்டுமே .

1. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஒவ்வொரு தெருக்களையும் இருபுறங்களிலும் அடைக்க வேண்டும்.
2.அந்த மக்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகள், தண்ணீர், பால் ஆகியவற்றை தன்னார்வலர்கள் அல்லது தற்காலிக ஊழியர்கள் மூலம் தெருமுனையில் ஒரே இடத்தில் வைத்து வழங்க வேண்டும்.
3. மற்ற பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த பகுதியிலேயே சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும்.
4. இறப்பு தவிர எந்த ஒரு விஷயத்திற்கும் யாருக்கும் வெளியே செல்ல அனுமதி கிடையாது.
5. எதிர்கால வாழ்க்கையே வீணாகும் என்ற சூழ்நிலை இருக்க 15 லிருந்து 30 நாட்கள் வரை ஒரே இடத்தில் அமைதியாக இருப்பது என்பது பெரிய காரியம் அல்ல.

இப்படி 15 நாட்களில் இருந்து 30 நாட்கள் வரை “சீல் டவுன்” செய்யும் போதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ’ஏ’ சிம்டமேட்டிக் உள்ளவர்களும், புதிய தொற்றால் பாதிக்கப்படுபவர்களும் வெளியே நடமாடாமல் ஒரே இடத்தில் இருப்பதால் 90 சதவீதம் வரை நோயின் வீரியம் அந்தந்த பகுதியிலேயே குமுங்கி அமுங்கிவிடும் என்பது விஷயம் அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.

ஏற்கனவே உயிரை கொடுத்து சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த அரசின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் இந்த விஷயத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக “சீல் டவுன்” செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவு அதிகமல்ல ஒரு லட்சம் தகர சீட்டுகளும், ஒரு லட்சம் சவுக்கு கம்புகளும் போதுமானது. இது தமிழக அரசுக்கு நன்றாக தெரிந்த விஷயம் தான்.

குறிப்பு: தமிழகத்தில் வாணியம்பாடி, ஆம்பூர்... அண்டை மாநிலமான பெங்களூர் ஆகியவை கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பியதற்கு ஒரே காரணம் “சீல் டவுன்” முறையை கடைபிடித்தது தான். இதை தமிழக முதலமைச்சர் எடப்பாடியார் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து சென்னை மக்களையும், தமிழக மக்களையும் இந்த பேராபத்தில் இருந்தும், பயத்தில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவருடைய வேண்டுகோள் ஆகும்.
முக்கிய குறிப்பு:
நன்மைகள்:-
1. சீல் டவுனில் மிக முக்கியமான அட்வாண்டேஜ் என்னவென்றால் கொத்து கொத்தாக பாதிக்கப்படும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீஸ்காரர்கள், சுகாதாரப்பணியாளர்கள் முற்றிலுமாக காப்பாற்றப்படுவார்கள்.
2. ஓடி ஓடி வேலை செய்தாலும் உடனடியாக கட்டுப்படுத்த கூடிய நோய் அல்ல இது. எனவே இதுபோன்ற அறிவார்ந்த எளிதான செயல்களால் மட்டுமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.
3. பிரச்சனை அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் மிகப்பெரிய குழப்பங்கள் மற்றும் இடியாப்ப சிக்கல்களை இதனால் தவிர்க்கலாம்.
4. தேவையான நோய்களுக்கு தேவையான படுக்கை வசதிகள் கிடைக்கும்.
5. அரசும், அரசு இயந்திரமும் பதற்றம் இல்லாமல் செயல்படலாம் .
திரு.எடப்பாடியார் அவர்களே, இதை வெற்றிகரமாக செய்தால் தமிழ் உள்ளவரை, தமிழகம் உள்ளவரை உங்கள் பெயர் வரலாற்றில் நீடித்து நிற்கும்.
