சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரி லால் புரோகித்-ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 7 மணியளவில் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஆளுநர் பன்வாரிலால் - முதலமைச்சர் பழனிச்சாமி சந்திப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இந்த சந்திப்பின்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பான ஆலோசனையாக இருக்குமா? அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நிலைப்பாடு கொண்டுள்ளனர்.

சட்டமன்றத்தில் டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களும் எம்.எல்.ஏ.க்களும் இருந்து வருகின்றனர். இது தொடர்பான ஆலோசனை இருக்குமா? என்பது தெரியவில்லை. ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சந்திப்புக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆளுநர் - முதலமைச்சர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.