CM Edappadi Palanisamy Speech at the Assembly
பாஜகவுடன் கூட்டணியும் இல்லை ஆதரவும் இல்லை என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
பாரதிய ஜனதா, அதிமுகவை பின்னால் இருந்து இயக்குகிறது; பாஜகவுக்கு அதிமுக அடிபணிந்து போகிறது என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எதிர்கட்சிகள் கூறி வந்தன. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் நாங்கள் கூட்டணியும் இல்லை; ஆதரவும் இல்லை என்று
அதிரடியாக கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று திமுக எம்எல்ஏ பிச்சாண்டி காவிரி விவகாரம் தொடர்பாக பேசினார். அப்போது, மத்திய அரசுடன் ஆளும் அதிமுக அரசு நட்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் 5 ஆண்டு கூட்டணி இருந்த திமுக அப்போது என்ன செய்தது என்று பதில்கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய முதலமைச்சர், தற்போது நாங்கள் பாஜகவுடன் கூட்டணியும் இல்லை, ஆதரவும் இல்லை என்றார். தொடர்ந்து காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
